For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குட்கா விவகாரம்: சிபிஐ வழக்கு பதிவு

குட்கா விற்பனை தொடர்பான வழக்கை விசாரிக்க தொடங்கி இருக்கும் சிபிஐ தற்போது முறையாக வழக்கு பதிவு செய்துள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    குட்கா முறைகேடு வழக்கில் சிபிஐ விசாரணைக்கு தடை இல்லை- வீடியோ

    டெல்லி: குட்கா விற்பனை தொடர்பான வழக்கை விசாரிக்க தொடங்கி இருக்கும் சிபிஐ தற்போது முறையாக வழக்கு பதிவு செய்துள்ளது.

    குட்கா, பான் மசாலா போன்ற போதைப் பொருட்களை உற்பத்தி செய்யவும், விற்கவும் கடந்த 2013ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு தடை விதித்தது. ஆனாலும் குட்கா பொருட்கள் தொடர்ந்து சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்யப்பட்டு வந்திருக்கிறது.

    CBI registers case on Gutka issue as per Supreme Court judgment

    இந்த விற்பனைக்கு பின்னிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் காவல்துறை டிஜிபி ஆகியோர் லஞ்சம் வாங்கி இருப்பதாக புகார் எழுந்தது.இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு, இந்த விவகாரத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டுமெனக் கூறி கடந்த மாதம் தீர்ப்பளித்தது. இந்தநிலையில் குட்கா விற்பனை தொடர்பான வழக்கை விசாரிக்க தொடங்கி இருக்கும் சிபிஐ தற்போது முறையாக வழக்கு பதிவு செய்துள்ளது.

    தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையின் முதல் தகவல் அறிக்கையை ஏற்று வழக்குப்பதிவு செய்வதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

    English summary
    CBI registers case on Gutka issue as per Supreme Court judgment.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X