For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'டெஹல்கா' அம்பலப்படுத்திய ஜார்ஜ் பெண்டான்ஸின் ஏவுகணை ஊழல் வழக்கை மூடியது சிபிஐ!

By Mathi
Google Oneindia Tamil News

CBI set to file closure report in Barak missile deal
டெல்லி: டெஹல்கா இணையதளம் அம்பலப்படுத்திய முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மீதான பாரக் ஏவுகணை ஊழல் வழக்கை சிபிஐ கைவிட முடிவு செய்துள்ளது.

இஸ்ரேலிடமிருந்து ரூ1,150 கோடிக்கு பாரக் ஏவுகணைகளை 2000-ம் ஆண்டு இந்தியா வாங்கியது. இந்த ஆயுத கொள்முதலில் பெருமளவு ஊழல் நடந்திருப்பதை டெஹல்கா இணையதளம் 2001ஆம் ஆண்டு அம்பலப்படுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த ஆயுத பேரத்தில் ரூ2 கோடி லஞ்சம் பெறப்பட்டது என்பது புகார். இதைத் தொடர்ந்து 2006ம் ஆண்டு ஜார்ஜ் பெர்னாண்டஸ், முன்னாள் கடற்படை தளபதி சுஷில் குமார், சமதா கட்சியின் தலைவராக இருந்த ஜெயா ஜெட்லி, ஆயுத தரகர் சுரேஷ் நந்தா, சமதா கட்சியின் முன்னாள் பொருளாளர் ஆர்.கே.ஜெயின் ஆகியோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையில் போதுமான ஆதாரங்கள் இல்லாததால் இந்த வழக்கை கைவிட சிபிஐ முடிவு செய்துள்ளது.

English summary
Seven years after registering a case of alleged bribe in purchase of Barak missiles from Israel, the CBI is all set to file a closure report in the case which had named former Defence Minister George Fernandes and the then Naval Chief Admiral Sushil Kumar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X