For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொல்கத்தா கமிஷனரை கைது செய்யக் கூடாது.. கட்டாய வாக்குமூலம் வாங்கக் கூடாது- சுப்ரீம் கோர்ட் அதிரடி

Google Oneindia Tamil News

Recommended Video

    கொல்கத்தா கமிஷனர் வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி- வீடியோ

    டெல்லி: கொல்கத்தா கமிஷனரை கைது செய்யக் கூடாது என்றும் சிபிஐ அவரை கட்டாயப்படுத்தி வாக்குமூலம் பெறக் கூடாது என சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு விசாரணைக்கு கொல்கத்தா கமிஷனர் ராஜீவ் குமார் ஒத்துழைப்பு நல்கவில்லை என கூறி உச்சநீதிமன்றத்தில் சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

    CBI should not arrest Kolkatta Commissioner, orders SC

    இந்த வழக்கானது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபக் குப்தா ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கமிஷனர் ராஜீவ் குமார் சிபிஐ முன்பு விசாரணைக்கு ஆஜராக வேண்டும். சிபிஐ எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு செல்ல வேண்டும். ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றனர்.

    ஜனநாயகத்தை கொன்றது மோடி அரசு.. காப்பாற்றி விட்டது சுப்ரீம் கோர்ட்.. மமதா மகிழ்ச்சி ஜனநாயகத்தை கொன்றது மோடி அரசு.. காப்பாற்றி விட்டது சுப்ரீம் கோர்ட்.. மமதா மகிழ்ச்சி

    அது போல் ராஜீவ் குமாரை ஷில்லாங், மேகாலயா ஆகிய நடுநிலையான இடத்தில் வரவழைத்து விசாரிக்க வேண்டும். ராஜீவ் குமாரை வரும் பிப்ரவரி 20-ஆம் தேதி வரை கைது செய்யக் கூடாது. அவரிடம் கட்டாயப்படுத்தி வாக்குமூலம் வாங்க கூடாது என்று சிபிஐக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த வழக்கை வரும் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    English summary
    Supreme court orders CBI not to arrest Kolkatta Commissioner Rajeev Kumar and no compulsion statement getting from him.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X