For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொல்கத்தாவில் கனிமொழி... மமதாவின் போராட்டத்துக்கு நேரில் ஆதரவு

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாளை திமுகவை சேர்ந்த ராஜ்ய சபா எம்.பி கனிமொழி அவரை சந்திக்க உள்ளார்.

Google Oneindia Tamil News

கொல்கத்தா: மமதாவின் சத்தியாகிரக போராட்டத்துக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவிக்கும் வகையில் திமுக எம்பி கனிமொழி கொல்கத்தா வந்து சேர்ந்துள்ளார். மமதாவின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க ராஷ்டிட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவும் கொல்கத்தா வந்துள்ளார்.

சாரதா நிதி நிறுவன விவகாரம், ரோஸ்வேலி சிட்பண்ட் மோசடி தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இரு வழக்குகள் தொடர்பாக மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

CBI vs Mamata Banerjee: MP Kanimozhi to reach Kolkata today to extend support to WB CM

அந்த விவகாரம் தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனரிடம் விசாரணை நடத்தச்சென்ற சிபிஐ அதிகாரிகள் 5 பேரை மேற்கு வங்க போலீசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிபிஐயை கண்டித்து திரிணாமுல் காங்கிரசார் மாநிலத்தின் பல பகுதிகளிலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு மற்றும் மமதா பானர்ஜி இடையே கடும் மோதல் ஏற்பட்டு உள்ளதால், மேற்கு வங்கத்தில் பதற்றம் நிலவி வருகிறது.

மமதாவுக்கு ஆதரவாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி உள்ளிட்ட தலைவர்கள் ஆதரவு குரல் கொடுத்துள்ளனர்.

தமது ஆதரவையும், கட்சியின் ஆதரவையும் தெரிவிக்கும் பொருட்டு.. திமுக தலைவர் கனிமொழியை. ஸ்டாலின் கொல்கத்தாவுக்கு அனுப்பி வைத்துள்ளார். விமானம் மூலம் கொல்கத்தாவுக்கு கனிமொழி வந்துள்ளார்.

கனிமொழியை போன்று மமதாவின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க ராஷ்டிட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவும் கொல்கத்தா வந்துள்ளார். நாடு முழுவதும் மமதாவின் போராட்டத்துக்கு ஆதரவு பெருகி வருவது மத்தியில் உள்ள பாஜகவுக்கு பெரும் பிரச்சனையாக தற்போது உருவெடுத்துள்ளது.

English summary
DMK Parliament leader and RS MP Kanimozhi to reach Kolkata today to extend DMK's support to WB CM Mamata Banerjee's dharna.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X