For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின! கடந்த ஆண்டைவிட தேர்ச்சி விகிதம் குறைவு

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. கடந்த ஆண்டை ஒப்பிட்டால் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது.

மார்ச் 1 ம் தேதி துவங்கி மார்ச் 28ம் தேதி வரை நடந்த சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வுகளை நாடு முழுவதிலும் உள்ள 13 லட்சத்து 73 ஆயிரத்து 853 மாணவ, மாணவிகள் எழுதினர்.

CBSE announces class 10 examination results

தமிழகம், ஆந்திரம், கேரளம், கர்நாடகம், மகாராஷ்டிரம், கோவா, புதுச்சேரி, அந்தமான் நிகோபார் தீவுகள், டாமன்- டையூ ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிர தேசங்களை உள்ளடக்கிய சிபிஎஸ்இ சென்னை மண்டலத்தில் 10-ம் வகுப்பு தேர்வை ஒரு லட்சத்து 62 ஆயிரம் பேர் எழுதினர்.

விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்த நிலையில், இன்று மதியம் 1 மணியளவில் ரிசல்ட் வெளியானது. இவ்வாண்டு தேர்ச்சி விகிதம் 96.21 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம், 97.31% என்ற அளவில் இருந்தது.

www.cbse.nic.in, www.cbseresults.nic.in., www.results.nic.in போன்ற இணையதள முகவரிகளில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

English summary
CBSE announces class 10 examination results on Saturday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X