For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகின.. இணையதளங்களில் பார்க்க ஏற்பாடு

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று சிபிஎஸ்இ இணையதளங்களில் வெளியானது.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

டெல்லி : மத்திய அரசின் பாடத்திட்டமான சிபிஎஸ்இ.,க்கான 12ம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. cbseresults.nic.in என்கிற இணையதளத்தில் முடிவுகளைப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கான 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் மாதம் 5ம் தேதி முதல், ஏப்ரல் 12ம் தேதி வரை நடந்தது. இதில் நாடு முழுவதும் 11.86 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதியுள்ளனர்.

CBSE Board 12th exam results declared today

தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா ஆகிய மாநிலங்களையும், புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகள், டாமன் டையு ஆகிய யூனியன் பிரதேசங்களையும் உள்ளடக்கிய சென்னை மண்டலத்தில் 71 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தேர்வெழுதியுள்ளனர்.

இந்நிலையில், பொருளாதாரவியல் பாடத்தின் கேள்வித்தான் வெளியானதாக சர்ச்சை எழுந்ததையடுத்து, அதற்கான மறுதேர்வு ஏப்ரல் 25 தேதி நடத்தப்பட்டது. இந்நிலையில், 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று மதியம் வெளியாக உள்ளதாக சிபிஎஸ்இ கல்வித்துறைச் செயலர் அனில் ஸ்வரூப் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

அதன்படி, இன்று மதியம் 12.20 மணியளவில் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்த முடிவுகளை cbse.examresults.net, cbseresults.nic.in and results.gov.in போன்ற வெப்சைட்டுகளில் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

English summary
CBSE Board 12th exam results declared today. As CBSE secretary Anil Swarup said, the results are declared by today afternoon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X