For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2018-ம் ஆண்டு முதல் சி.பி.எ.ஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயம்...நிர்வாகக் குழு பரிந்துரை

வரும் 2018-ம் ஆண்டு முதல் சி.பி.எ.ஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயமாகிறது.

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: 2018-ம் ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடதிட்டத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் பொதுத்தேர்வை கட்டாயமாக்க வேண்டும் என சிபிஎஸ்இ நிர்வாகக் குழு பரிந்துரைத்துள்ளது.

சி.பி.எஸ்.சி பாடத் திட்டத்தில் பயிலும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 2010-ம் ஆண்டு வரை பொதுதேர்வு நடைப்பெற்றது. ஆனால் பல்வேறு காரணங்களுக்கு இந்த பொது தேர்வு நடைமுறை 2010-ஆம் ஆண்டோடு கைவிடப்பட்டது. இதனால் சி.பி.எஸ்.சி பாடத் திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் நேரடியாக 12-ம் வகுப்பில் பொது தேர்வை ஏதிர்கொள்வதால் அவர்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாக கல்வியாளர்கள் தெரிவித்தனர்.

CBSE for mandatory Class X board exams from 2018

இந்நிலையில், 2018-ம் ஆண்டு முதல் சி.பி.எ.ஸ்.இ. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை கட்டாயமாக்க வேண்டும் என சி.பி.எஸ்.இ. நிர்வாகக் குழு பரிந்துரைத்துள்ளது. இந்தப் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டால் வரும் 2018ம் ஆண்டு முதல் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயமாக்கப்படும்.

தற்போது உள்ள நடைமுறைப்படி, சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மாணவர்கள் விரும்பினால் பொதுத் தேர்வு எழுதலாம் அல்லது பள்ளியில் நடத்தப்படும் தேர்வை எழுதலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

English summary
Board exams for Class X are set to become compulsory for all CBSE students from 2018.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X