For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பள்ளி வாகனங்களில் சிசிடிவி , ஜிபிஎஸ் கருவி கட்டாயம்: சிபிஎஸ்இ புது உத்தரவு

பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகனத்தில் சிசிடிவி கேமரா இருக்க வேண்டும். என சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது.

By Vazhmuni
Google Oneindia Tamil News

டெல்லி : பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகனத்தில் கட்டாயமாக சிசிடிவி கேமரா , ஜிபிஎஸ் கருவிகள் இருக்க வேண்டும் என சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது. பள்ளி குழந்தைகளின் பாதுகாப்புக்கான விதிமுறைகளை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகனத்தில் உள்ள ஜன்னல்களை திரை சீலை, கருப்பு கண்ணாடியால் மூடக்கூடாது என்று தெரிவித்துள்ளது. மேலும் பள்ளி வாகனத்தில் ஒரு கண்காணிப்பு மேலாளர் இருக்க வேண்டும் என்றும் அதில் \வெளியாட்கள் இருக்க கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது.

cctv camera must for school buses says CBSE

பள்ளி வாகனம்

பள்ளி வாகனம் முழுவதும் மஞ்சள் நிறத்தில் வண்ணம் தீட்ட வேண்டும் . வாகனத்தின் முன் பக்கமும் , பின் பக்கமும் பள்ளி பேருந்து பேருந்து என்று எழுத வேண்டும். ஒரு வேளை வாடகை வாகனம் என்றால் பள்ளி செல்லும் வாகனம் என்று தெளிவாக எழுதி இருக்கவேண்டும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. மேலும் வாகனத்தில் உள்ள ஜன்னல்களை திரை சீலை, கருப்பு கண்ணாடியால் மூடக்கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளது.

ஓட்டுநரின் தகவல்

பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகன ஓட்டுநர் கனரக வாகனம் ஓட்டுவதில் 5 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவராக இருக்க வேண்டும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. மேலும் வாகனத்தில் ஓட்டுநரின் பெயர், முகவரி, ஓட்டுநர் உரிம எண், பேட்ஜ் எண் , வாகன உரிமையாளரின் தொலைபேசி எண் , போக்குவரத்து துறையின் உதவி எண்கள் உள்ளிட்டவைகள் நன்றாக கண் பார்வைக்கு தெரியும் படி இருக்க வேண்டும் என சிபிஎஸ்இ அறிவுறுத்தியுள்ளது.

வேகக் கட்டுப்பாட்டு கருவி

ஒரு மணி நேரத்திற்கு அதிகபட்சமாக 40 கிமீ வேகம் மட்டுமே செல்லவேண்டும். இதற்காக வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு கருவி அமைக்கவேண்டும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

சிசிடிவி , ஜிபிஎஸ் கருவி கட்டாயம்

பள்ளி வாகன உரிமையாளர் கட்டாயமாக வாகனத்தில் சிசிடிவி மற்றும் ஜிபிஎஸ் கருவிகளை பொறுத்தவேண்டும் என சிபிஎஸ்இ வலியுறுத்தியுள்ளது.

English summary
The Central Board of Secondary Education has issued comprehensive guidelines on safety of children in school buses. The Board has made speed governors with 40 km per hour, GPS and CCTV mandatory for school buses.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X