• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

17 வருடங்களில் இல்லாத அளவு.. சீனா மோதலுக்கு மத்தியில் பாகிஸ்தான் செய்து வரும் பயங்கரம்!

|

ஸ்ரீநகர்: கிழக்கு லடாக்கில் சீனாவுடன் நடந்துகொண்டிருக்கும் ராணுவ மோதல்களுக்கு மத்தியில், இந்திய எல்லைகளில் பாகிஸ்தான் ராணுவரீதியாக அச்சுறுத்தி வருகிறது. இந்த ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் எல்லை தாண்டி பீரங்கிகள் மூலமும் சிறிய ரக ஏவுகணைகள் மூலம் அத்துமீறி தாக்குதல்களை அதிக அளவில் நடத்தியிருக்கிறது. இதை இந்தியா திறம்பட முறியடித்துள்ளது.

இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 778 கி.மீ நீளமுள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் (கட்டுப்பாட்டு) வழியாக பாகிஸ்தான் மேற்கொண்ட போர்நிறுத்த மீறல்கள் (சி.எஃப்.வி) என்பத கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத அளவு என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

மத்திய அரசு நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த புள்ளி விவரங்களின் படி, ஜனவரி 1 முதல் செப்டம்பர் 7 வரை 3,186 முறை எல்லை தாண்டிய அத்துமீறல்கள் நடந்துள்ளன. இதில் 242 'எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூடு' சம்பவங்கள் ஜம்மு காஷ்மீரில் உள்ள 198 கி.மீ நீள சர்வதேச எல்லையில் நடந்துள்ளன, இந்த எல்லைகளை பெரும்பாலும் எல்லை பாதுகாப்பு படை நிர்வகிக்கிறது.

ஐ.நா.வில் சீனாவை வெச்சு செஞ்ச இந்தியா! பொருளாதார, சமூக கவுன்சில் உறுப்பினர் தேர்தலில் அமோக வெற்றி!

எல்லையில் அத்துமீறல்

எல்லையில் அத்துமீறல்

ஜனவரி-ஆகஸ்ட் காலக்கெடுவில். இராணுவ பதிவுகளின்படி, 2017 இல் 971 முறையும் 2018 ல் 1,629 முறையும் எல்லைகளில் அத்துமீறல் நடந்துள்ளன. ஆனால் இந்த எண்ணிக்கை 2019 இல் 3,168 ஆக உயர்ந்தது, பாலகோட் வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகும், காஷ்மீரில் 370 வது அரசியல் சாசன பிரிவை ரத்து செய்த பின்னரும் ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது.

சீனா லடாக்கில் அத்துமீறல்

சீனா லடாக்கில் அத்துமீறல்

இந்த ஆண்டு, எல்லையில் அத்துமீறல்கள் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 350-400 என்கிற அளவில் நடந்துள்ளன. மே மாத தொடக்கத்தில் சீனாவின் மக்கள் விடுதலை இராணுவ (பி.எல்.ஏ) வீரர்கள் கிழக்கு லடாக்கிற்குள் ஆழமாக ஊடுருவிய பின்னர் அதாவது, சீனாவுடனான இந்தியாவின் இராணுவ மோதல் வெடித்ததில் இருந்து பாகிஸ்தான் எல்லையில் அத்துமீறல் வேகத்தை அதிகரித்துள்ளது.

பாகிஸ்தான் என்ன செய்கிறது

பாகிஸ்தான் என்ன செய்கிறது

"பாகிஸ்தான் வெளிப்படையாக அதன் பங்காளியான 'சீனாவை ஆதரிக்கிறது. மலைப்பாதைகள் பனியால் மூடப்படுவதற்கு முன்னர், முடிந்தவரை பயங்கரவாதிகளையும் ஆயுதங்களையும் ஜம்மு காஷ்மீருக்குள் அனுப்ப விரும்புகிறது. பாகிஸ்தானின் ஒவ்வொரு எல்லை மீறலின் போது எங்கள் துருப்புக்கள் திறம்பட பதிலளிக்கின்றன, " என்று இந்தியாவின் மூத்த இராணுவ அதிகாரி கூறினார்.

சீன எல்லையில் கவனம்

சீன எல்லையில் கவனம்

அணு ஆயுதம் வைத்துள்ளதாக அடிக்கடி மிரட்டும் பாகிஸ்தானின் அத்துமீறல் என்பது இந்தியாவுக்கு மோசமான யதார்த்தமாகிவிட்டது. இராணுவத்தின் கவனம் தற்போது சீனாவுடனான இராணுவ மோதலில் இருப்பதால், தலா 50,000 வீரர்கள் மற்றும் டாங்கிகள், ஹோவிட்ஸர்கள் மற்றும் பிற ஆயுத அமைப்புகள் கிழக்கு லடாக்கில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டு வரிசையில் (எல்ஏசி) குவிந்துள்ளன. அதேநேரம் பாகிஸ்தானுக்கு எதிராகவும் எல்லையில் இந்தியா தயார் நிலையில் இருப்பதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

 நிரந்தரமாக முகாம்

நிரந்தரமாக முகாம்

இந்தியா பாகிஸ்தான் இடையே தெளிவாக வரையறுக்கப்பட்ட எல்லை என்பது இரு நாடுகளும் உருவானதில் இருந்தே இல்லை. இதனால் பதற்றமான பகுதியான அங்கு இந்திய ராணுவத்தினர் பதுங்கு குழிகளை அமைத்துள்ளனர். அத்துடன் நிரந்தரமாக எல்லையில் முகாம் அமைத்துள்ளனர்.

அங்கும் படைகள் தேவை

அங்கும் படைகள் தேவை

தற்போது ​​லடாக்கிலிருந்து அருணாச்சல பிரதேசம் வரை 3,488 கி.மீ நீளமுள்ள ‘ஆக்டிவ்' எல்.ஐ.சி யையும் இந்தியா படைகளை வைத்து பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது. "சீனா எல்லையையும் பாகிஸ்தான் எல்லைப்போல் மாற்ற விரும்பினால், நிரந்தரமாக படைகளை குவிக்க தயாராக இருக்கிறோம். ஆனால் இது கடினமானது. அதற்கு நிறைய விலை கொடுக்க வேண்டியதிருக்கும்.. எனினும் நம்முடைய ராணுவ வீரர்கள், சீன ராணுவத்தைப்போல் அல்லாமல் எந்த காலநிலையிலும் மற்றும் எவ்வளவு கடினமான நிலப்பரப்பிலும் பயன்படுத்தப்படுகிறார்கள்.

உயரமான போர்க்களம்

உயரமான போர்க்களம்

எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டு பகுதியை தவிர, 1984ம் ஆண்டு ஏப்ரல் முதல் சியாச்சின் பனிப்பாறை-சால்டோரோ ரிட்ஜ் பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்தும் அனைத்து உயரங்களிலும் இந்திய வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர், பாகிஸ்தானிய துருப்புக்கள் இதேபோன்ற நடவடிக்கையை முன்கூட்டியே மேற்கொண்டதற்கு பதிலடியாக , ​​'ஆபரேஷன் மேக்தூட்' மூலம் 1984 முதல் சியாச்சின் பனிப்பாறை- உலகின் மிக உயர்ந்த மற்றும் குளிரான போர்க்களமானது..

 
 
 
English summary
Ceasefire violations (CFVs) by Pakistan across the 778-km-long Line of Control (LoC) in just the first nine months of this year have already beaten all annual records for the last 17 years.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X