For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜல்லிக்கட்டு விவகாரம்:மத்திய சுற்றுச்சூழல்துறை நாளை அவசர ஆலோசனை!

ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல்துறை நாளை அவசர ஆலோசனை நடத்தவுள்ளது. நாளை பகல் 1 மணிக்கு போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக நாளை பகல் 1 மணிக்கு டெல்லியில் மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் ஜல்லிக்கட்டு தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை, மதுரை உட்பட தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இதில் பெரும்பலாலும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களே அதிகளவில் பங்கேற்றுள்ளனர்.

Central Environmental ministry conducts emergency consultation tomorrow

போராட்டம் தீவிரமடைந்ததை யொட்டி நாளை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.இந்நிலையில் மத்திய சுற்றுச்சூழல்துறை தலைவர் அனில் மாதவ் தவே தலைமையில் நாளை டெல்லியில் அவசரக் கூட்டம் நடைபெறுகிறது.

நாளை பகல் 1 மணிக்கு நடைபெறும் இக்கூட்டத்தில் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் முக்கிய அதிகாரிகள் பலர் கலந்துகொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஜல்லிக்கட்டுக்குறித்த முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்ககப்படுகிறது.

English summary
Central Environmentel ministry conducts emergency consultation tomorrow. In this meet some important decision will be taken on the Jallikattu issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X