For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கரும்பு விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வு காண ரூ.8,000 கோடி ஒதுக்கீடு: மத்திய அரசு முடிவு

கரும்பு விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வு காண ரூ.8,000 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

டெல்லி : கரும்பு விவசாயிகளின் பிரச்னைக்குத் தீர்வு காண மத்திய அரசு 8000 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான முடிவு பிரதமர் தலைமையிலான ஆலோசனைக்கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கரும்பு விவசாயிகள் நிதிப் பிரச்னையில் சிக்கித் தவித்து வருகின்றனர். மேலும், சர்க்கரை ஆலைகளும் விவசாயிகளுக்குக் கோடிக்கணக்கான ரூபாய் நிலுவைத் தொகை வைத்துள்ளன.

Central Governement to give 8000 crores Sugarcane Farmers

இதனால் அடிக்கடி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இந்த சூழ்நிலையை சமாளிப்பதற்கு இன்று பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இதில், கரும்பு விவசாயிகள் எதிர்கொண்டு வரும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக மத்திய அரசு விரிவான திட்டங்களை செயல்படுத்த உள்ளது. இதற்காக 8000 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி 1200 கோடி ரூபாய் மதிப்பில் கரும்பு கொள்முதல் நிலையங்களை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 4400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எத்தனால் உற்பத்தியை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சர்க்கரைக்கான இறக்குமதி வரியை 50 விழுக்காட்டிலிருந்து 100 விழுக்காடாக அதிகரிக்கவும், ஏற்றுமதிக்கான வரியை முழுமையாக நீக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

English summary
Central Governement to give 8000 crores Sugarcane Farmers. Sugarcane Farmers over the Nation is suffered from lot of problems and the Central Government approved the plan on today's meeting.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X