For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரூ.10,400 கோடி ஒதுக்கீடு.. மெகா பட்ஜெட்.. இஸ்ரோவின் சூப்பர் டூப்பர் திட்டங்கள் ரெடி!

இந்த வருடம் இஸ்ரோவில் பல முக்கிய திட்டங்கள் நிறைவேற்றப்பட இருப்பதால், மத்திய அரசு 10,400 கோடி ரூபாய் இஸ்ரோவின் திட்டங்களுக்காக ஒதுக்கி உள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    பெரிய பட்ஜெட்டில் இஸ்ரோவின் புதிய திட்டங்கள்-வீடியோ

    டெல்லி: இந்த வருடம் இஸ்ரோவில் பல முக்கிய திட்டங்கள் நிறைவேற்றப்பட இருப்பதால், மத்திய அரசு 10,400 கோடி ரூபாய் இஸ்ரோவின் திட்டங்களுக்காக ஒதுக்கி உள்ளது.

    இந்த வருடம் இஸ்ரோவின் வரலாற்றில் மிகவும் முக்கியமான வருடமாக இருக்க போகிறது. இந்த ஒரு வருடம் முழுக்க மொத்தம் 12 விண்வெளி திட்டங்களை செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டு இருக்கிறது.

    மாதம் ஒருமுறை என மொத்தம் 12 திட்டங்கள் செயல்படுத்தப்பட இருக்கிறது. ஏற்கனவே இந்த 12ல் 3 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது

    திட்டம்

    திட்டம்

    இந்த வருடம் செய்யப்படுவதில்லை பெரிய திட்டம் என்றால் அது சந்திராயன் திட்டம்தான். சந்திராயன் திட்டம் ஒன்று வெற்றி அடைந்ததை அடுத்து தற்போது சந்திராயன் திட்டம் இரண்டு செயல்படுத்தப்பட உள்ளது. இந்த சந்திராயன் மூலம் நிலவில் ரோவர் ஒன்று தரையிறக்கப்படும். இது நிலவில் இறங்கி ஆராய்ச்சி செய்யும். இது மே மாதம் ஏவப்பட இருந்தது. ஆனால் இப்போது வானிலை காரணமாக அக்டோபர் மாதத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

    இன்னும் பல திட்டங்கள்

    இன்னும் பல திட்டங்கள்

    இன்னும் 7 திட்டங்கள் அடுத்தடுத்த மாதங்களில் செயல்படுத்தப்படும். ஜி சாட் 11 திட்டம் ஜூன் மாத இறுதியில் நிறைவேற்றப்படலாம். இதற்கு அடுத்த மாதமே ஜிஎஸ்எல்வி 29 ராக்கெட் மூலம் ஏவப்பட்ட உள்ளது. இது சாட்டிலைட்டுடனான நம்முடைய தொடர்பை வேகப்படுத்த உதவும் என்று கூறப்பட்டுள்ளது.அடுத்து ஜி சாட் 7 சாட்டிலைட் அனுப்பப்படும். இதன் மூலம் ராணுவத் துறைக்கு அதிக பலன் ஏற்படும். அடுத்த வருடம் முதல் நான்கு மாதங்களில் இன்னும் 4 புதிய சாட்டிலைட்டுகள் அனுப்பப்பட உள்ளது.

    10,400 கோடி ரூபாய்

    10,400 கோடி ரூபாய்

    இப்படி தொடர்ச்சியாக பல திட்டங்கள் இருப்பதால், அனைத்து திட்டங்களையும் இந்த வருடம் முடிக்க மொத்தம் 10,400 கோடி ரூபாயை மத்திய அரசு இஸ்ரோவிற்கு ஒதுக்கி உள்ளது. மத்திய அரசு இஸ்ரோ வரலாற்றில் இவ்வளவு பணம் மொத்தமாக ஒதுக்குவது இதுவே முதல்முறையாகும். இதனால் மேற்கண்ட அனைத்து திட்டங்களையும் முடிக்க மிகவும் எளிதாக இருக்கும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.

    வேலை வாய்ப்பு

    வேலை வாய்ப்பு

    அதேபோல் இதனால் நிறைய வேலை வாய்ப்பு உருவாக்கப்பட உள்ளது. வருடம் முழுக்க விண்வெளி திட்டங்கள் செயல்படுத்தப்பட இருப்பதால் நிறைய பேர் புதிதாக பணிக்கு சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. மொத்தமாக 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு இதனால் உருவாகும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.

    English summary
    Central Government gives Rs. 10,400 for various projects of ISRO. ISRO has a master plan, in which it will do one great project for every month. It plans to do 12 super project for next 12 months.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X