For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விருந்தினர் மாளிகையை காலி செய்யவும்... தேவகவுடாவிடம் மத்திய அரசு கறார்

Google Oneindia Tamil News

டெல்லி: முன்னாள் பிரதமர் தேவகவுடா பயன்படுத்தி வரும் விடல் பாய் படேல் விருந்தினர் மாளிகையை காலி செய்யுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

கடந்த 1996-ம் ஆண்டு ஐக்கிய முன்னணி அமைப்பு சார்பில் பிரதமராக பொறுப்பேற்ற தேவகவுடா, 1997-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை அந்தப் பதவியில் இருந்தார்.

சுமார் ஒன்றை ஆண்டுகாலம் தேவகவுடா பிரதமராக பதவி வகித்ததை அடுத்து மத்திய அரசின் அத்தனை சலுகைகளையும் பயன்படுத்தி வருகிறார்.

பிரதமர் மோடி தாய் ஹீராபென்னுடன் இருக்கும் புகைப்படம் ரூ 20 லட்சத்துக்கு ஏலம்பிரதமர் மோடி தாய் ஹீராபென்னுடன் இருக்கும் புகைப்படம் ரூ 20 லட்சத்துக்கு ஏலம்

முக்கியத் தலைவர்

முக்கியத் தலைவர்

தேவகவுடாவை பொறுத்தவரை கர்நாடக மாநிலத்தின் மூத்த அரசியல்வாதியாகவும், இந்தியாவின் முக்கியத் தலைவர்களில் ஒருவராகவும் திகழக்கூடியவர். இவர் முதலமைச்சர், பிரதமர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்துள்ளார்.

முன்னாள் பிரதமர்

முன்னாள் பிரதமர்

முன்னாள் பிரதமர் என்பதன் காரணமாக தேவகவுடாவுக்கு மத்திய அரசு சார்பில் பல சலுகைகள் அளிக்கப்படுகின்றன. பாதுகாப்பு தொடங்கி சகல விவகாரங்களிலும் மத்திய அரசின் சலுகைகளை பயன்படுத்தி வருகிறார் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேவகவுடா.

விருந்தினர் மாளிகை

விருந்தினர் மாளிகை

இதனிடையே டெல்லியில் தேவகவுடாவுக்கு அரசு இல்லம் ஒதுக்கப்பட்டு அதை அவர் பய்னபடுத்தி வரும் நிலையில், கூடுதலாக விடல் பாய் படேல் விருந்தினர் மாளிகையையும் அவர் உபயோகித்து வருகிறார். ஒரே நபர் இரண்டு அரசு கட்டடங்களையும் பயன்படுத்துவது தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு புகார் எழுந்தது.

காலி செய்யவும்

காலி செய்யவும்

இதையடுத்து விடல் பாய் படேல் விருந்தினர் மாளிகையை மட்டும் தேவகவுடா காலி செய்ய வேண்டும் என்றும், வழக்கம் போல் டெல்லி வந்தால் அவர் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள அரசு இல்லத்தை பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் மத்திய அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

English summary
Central Government instructs ex pm Devegowda to leave the delhi guesthouse
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X