For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீட் தேர்வில் மாநில பாடத்திட்டத்தையும் பரிசீலித்து வினாத்தாள் தயாரிக்க மத்திய அரசு முடிவு

நீட் தேர்வில் மாநில பாடத்திட்டத்தையும் பரிசீலித்து வினாத்தாள் தயாரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

டெல்லி: நீட் தேர்வில் மாநில பாடத்திட்டத்தையும் பரிசீலிரத்து வினாத்தாள் தயாரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் தமிழக மாணவர்கள பயனடைவர் என தெரிகிறது.

நீட் எனப்படும் தேசிய தகுதி காண் தேர்வின் மூலம் நாடு முழுவதும் ஒரே மாதிரியான முறையில் மருத்துவ படிப்புகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் இந்த தேர்வு நடத்தப்பட்டது.

போராட்டம்

போராட்டம்

இதனால் ஏழை மாணவர்கள், தமிழ் வழியில் கல்வி பயின்றோர் பாதிக்கப்படுவர் என்று கூறியும் மத்திய அரசு இதுகுறித்து பரிசீலிக்கவில்லை. இதனால் தமிழகத்தில் போராட்டங்களும், உயிரிழப்புகளும் நடந்ததுதான் மிச்சம். மேலும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை கொண்டு வினாத்தாள் தயாரிக்கப்படுவதால் மாநில பாடத்திட்ட மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

மாணவர்கள் எதிர்பார்ப்பு

மாணவர்கள் எதிர்பார்ப்பு

வரும் மார்ச் மாதம் பிளஸ் 2 பொதுத் தேர்வு நடைபெறவுள்ள நிலையில் இந்தாண்டாவது நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் தமிழக மாணவர்களும் பெற்றோர்களும் உள்ளனர்.

நீதியரசர்கள் யோசனை

நீதியரசர்கள் யோசனை

கடந்த முறையே சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை மட்டும் வைத்துக் கொண்டு வினாத்தாளை தயாரிக்காமல் மாநில பாடத்திட்டத்தையும் சேர்க்க வேண்டும் என்று நீதியரசர்கள் யோசனை தெரிவித்தனர்.

எந்த ஆண்டு

எந்த ஆண்டு

இந்நிலையில் மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம் நீட் தேர்வுக்கான வினாத்தாளில் மாநில பாடத்திட்டங்களையும் சேர்த்து பரிசீலனை செய்ய முடிவு செய்துள்ளது. மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் தயாரிக்க முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டோ அல்லது அடுத்த ஆண்டோ வினாத்தாளில் மாநில பாடத்திட்டமும் பரிசீலிக்கப்படும்.

English summary
Central government proposing to consider to prepare Neet question paper with state board syllabus. It will help a lot for TN students more to get in to Medical college.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X