For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாஜ்பாய் மறைவுக்கு 7 நாள் துக்கம் அனுசரிப்பு.. மத்திய அரசு அறிவிப்பு!

வாஜ்பாய் மறைவுக்கு 7 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    வாஜ்பாய் மறைவுக்கு 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு... தமிழகத்தில் நாளை பொதுவிடுமுறை

    டெல்லி: வாஜ்பாய் மறைவுக்கு 7 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மாலை 5.5 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது.

    Central govt announced 7 days mourning for Vajpayee death

    வாஜ்பாய் மறைவு தனக்கு தனிப்பட்ட முறையில் பேரிழப்பு என பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 7 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
    தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆகஸ்ட் 22ம் தேதி வரை துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனிடையே வாஜ்பாய் மறைவையொட்டி டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சி கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.

    English summary
    Central govt has announced 7 days mourning for Vajpayee death. The national flag will be half of the post.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X