For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பராமரிப்பில் இல்லாத 81 லட்சம் ஆதார் எண்கள் முடக்கம்... மத்திய அரசு அதிரடி நடவடிக்கை

மாநில வாரியாக மற்றும் ஆண்டுதோறும் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி பராமரிக்கப்படாத சுமார் 81 லட்சம் ஆதார் எண்கள் மத்திய அரசால் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

By Devarajan
Google Oneindia Tamil News

டெல்லி: நாடு முழுவதும் 81 லட்சம் ஆதார் எண்கள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மாநில வாரியாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி பராமரிக்கப்படாத ஆதார் எண்கள் முடக்கப்பட்டதாகக் காரணமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியாகியுள்ள செய்திக் குறிப்பில், " மாநில வாரியாக மற்றும் ஆண்டுவாரியாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி உதய் மூலம் பராமரிக்கப்படாத ஆதார் எண்கள் முடக்கப்பட்டுள்ளது என்று மத்திய இணையமைச்சர் சௌத்ரி ராஜ்யசபாவில் தெரிவித்தார்.

Central Govt deactivates 81 lakh Aadhaar Numbers

கடந்த 2016-ம் ஆண்டு ஆதார் சட்டத்தில் குறிப்பிட்டுள்ள ஆதார் அட்டைப் பெறுவது தொடர்பாக விதிமுறைகள் 27 மற்றும் 28-வது பிரிவுகளின் கீழ் சுமார் 81 லட்சம் ஆதார் எண்கள் முடக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.

அந்தந்த மாநிலங்களில் உள்ள ஆதார் மையங்களில் உள்ள அதிகாரிகள் ஆதார் எண்ணைகளை இவ்விதிகளின் படி முடக்க முடியும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அண்மையில் 11.45 லட்சம் பான் அட்டைகள் முடக்கப்பட்டதாக வருமான வரித்துறை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்கள் ஆதார் எண் பயன்பாட்டில் உள்ளதா என்பதைத் தெரிந்து கொள்ள https://resident.uidai.gov.in/aadhaarverification இணையதளத்தில் சென்று பார்க்க முடியும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

English summary
Around 81 lakh Aadhaar numbers have been deactivated by the UIDAI or Unique Identification Authority of India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X