For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரத்த தானம் அளிக்கும் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை- மத்திய அரசு அறிவிப்பு

மத்திய அரசு ஊழியர்கள், ரத்த தானம் மற்றும் ரத்தத்தின் பகுதிப்பொருட்களை தானம் செய்வதை ஊக்குவிக்கும்பொருட்டு, சம்பளத்துடன் கூடிய விடுமுறையை அளிக்கப்படுவதாக பணியாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

By Dakshinamurthy
Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய அரசு ஊழியர்களிடம் ரத்ததானம் தொடர்பான விழிப்புணர்வை பெருக்கும் விதமாக ரத்ததானம் செய்தால் ஊதியத்துடன் கூடிய ஊதியம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் நலத்துறையின் சேவை விதிகளின்படி, தற்போதைய நிலையில், ஊழியர்கள் ரத்த தானம் செய்தால், அவர்களுக்கு அன்று விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த திட்டத்தை யாரும் முறையாக பயன்படுத்தாத நிலையில், புதிய சலுகைகளுடன் மீண்டும் இத்திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில், ரத்தத்தின் பகுதிப்பொருட்களான சிவப்பு அணுக்கள், பிளாஸ்மா, நுண்தட்டுக்கள் தானம் செய்பவருக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட உள்ளது.

Central Govt employees to get blood donation special leave.

இதற்கான ஆணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் வேலைநாளில் அங்கீகரிக்கப்பட்ட ரத்தவங்கிகளில் ரத்த தானம் அல்லது ரத்தத்தின் பகுதிப்பொருட்கள் தானம் செய்ததற்கான ஆதாரத்தை அளித்தால், அன்றைய நாளை, சிறப்பு சாதாரண விடுமுறையாக கருதி, அவர்களுக்கு அன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படும். தகுந்த ஆதாரங்களை சமர்ப்பித்து, ஆண்டிற்கு 4 முறை, அவர்கள் இந்த சலுகையை பெற முடியும் என்று பணியாளர் அமைச்சக உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Central Govt announces that employees will be given special leave with salary for blood and blood parts donation. And it has been said, per year 4 days special leave has been sanctioned.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X