For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விளாசிய சுப்ரீம்கோர்ட்.. சமூக வலைதள தகவல்களை கண்காணிக்கும் முடிவை கைவிட்டது மத்திய அரசு!

சமூக வலைதள தகவல்களை கண்காணிக்கும் முடிவை கைவிடுவதாக சுப்ரீம்கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்தும் திட்டமில்லை - மத்திய அரசு- வீடியோ

    டெல்லி: சமூக வலைதள தகவல்களை கண்காணிக்கும் முடிவை கைவிடுவதாக சுப்ரீம்கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    சமூக வலைதளங்களான வாட்ஸ்-அப், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றை கண்காணிக்க மையம் ஒன்றை அமைக்க மத்திய அரசின் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் முடிவு செய்தது.

    இதனை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ மஹுவா மொய்த்ரா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை கடந்த 13-ம் தேதி விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, மத்திய அரசு இந்திய மக்களின் வாட்ஸ்-அப் செய்திகளை டேப் செய்ய விரும்புகிறது.

    சுப்ரீம் கோர்ட் விமர்சனம்

    சுப்ரீம் கோர்ட் விமர்சனம்

    இது கண்காணிக்கும் அரசை உருவாக்குவது போன்றது. ஒரு கண்காணிப்பு நிலையை ஏற்படுத்துவது போன்றது என கடுமையாக விமர்சனம் செய்தது.

    2 வாரங்களில் பதில்

    2 வாரங்களில் பதில்

    மேலும் இதுதொடர்பாக 2 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இவ்விவகாரத்தில் தலைமை வழக்கறிஞர் கே.கே வேணுகோபாலின் வழிகாட்டலையும் கேட்டது.

    விசாரணைக்கு எடுக்கப்படும்

    விசாரணைக்கு எடுக்கப்படும்

    இவ்விவகாரம் தொடர்பாக மத்திய அரசு டெண்டர் கோருவதற்கு முன்னதாக ஆகஸ்ட் 3-ம் தேதி விசாரணைக்கு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

    கைவிட்டது மத்திய அரசு

    கைவிட்டது மத்திய அரசு

    இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சமூக வலைதளங்களை கண்காணிக்க மாவட்டந்தோறும் இணையதள கண்காணிப்பு மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது.

    English summary
    central govt today told the Supreme Court that it was withdrawing its notification proposing to create a social media hub to monitor online activities of citizens.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X