For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வந்தேமாதரத்தை ஏற்காதவர்கள் இந்தியாவில் வாழக்கூடாது...மத்திய இணை அமைச்சர் பேச்சு

Google Oneindia Tamil News

Recommended Video

    ஒடிஷா மோடியின் நிஜ முகம் இதுதானா.. பகீர் தகவல்கள்- வீடியோ

    புவனேஸ்வர்: வந்தேமாதரத்தை ஏற்காதவர்களுக்கு இந்தியாவில் வாழ உரிமை கிடையாது என மத்திய இணை அமைச்சர் பிரதாப் சாரங்கி தெரிவித்துள்ளார்.

    ஒடிஸாவின் மோடி என்றழைக்கபடும் பிரதாப் சாரங்கி கடந்த மக்களவைத் தேர்தலில் பாலசோர் தொகுதியில் போட்டியிட்டு முதன்முறையாக நாடாளுமன்றத்துக்கு சென்றார். இம்முறை புதுமுகங்களுக்கு கேபினட்டில் வாய்பளித்த மோடி, பிரதாப் சாரங்கியை மத்திய இணை அமைச்சர்(தனிப்பொறுப்பு) ஆக்கினார்.

    central minisiter prtap sarangi says who cannaot accept vandemadaram have no right to live india

    வீடு, கார், உள்ளிட்ட எந்த சொத்துக்களும் இல்லாத எளிய மனிதர், தேர்தல் முடிவு அறிவிப்பதற்கு முன்பு வரை சைக்கிளில் உலா வந்தவர். மேலும், தனது பேச்சில் ஆக்ரோஷத்தையும், அதிரடியையும் காட்டாதவரும் கூட. ஆனால் அன்மைக்காலமாக அவரின் பேச்சு உள்ளிட்ட நடவடிக்கைகளில் மாற்றம் தென்படுகிறது.

    காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கியது தொடர்பான விளக்கக் கூட்டம் ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் நேற்றிரவு நடைபெற்றது. ஜன் ஜாக்ரன் சபா அமைப்பு ஏற்பாடு செய்திருந்த அந்தக் கூட்டத்தில் பேசிய மத்திய இணை அமைச்சர் பிரதாப் சாரங்கி, வந்தேமாதரத்தை யார் ஏற்றுக்கொள்ளவில்லையோ, அவர்கள் இந்தியாவில் வசிக்க உரிமையில்லாதவர்கள் எனத் தெரிவித்தார்.

    ஹவுடி மோடி.. எரிசக்தி நிறுவனங்களுடன் மோடி நடத்திய ஆலோசனை.. திரும்பி பார்க்கும் உலக நாடுகள்!ஹவுடி மோடி.. எரிசக்தி நிறுவனங்களுடன் மோடி நடத்திய ஆலோசனை.. திரும்பி பார்க்கும் உலக நாடுகள்!

    மேலும், மோடியின் நடவடிக்கையால் காஷ்மீர் பெண்கள் சிறந்த முறையில் தங்கள் மணவாழ்க்கையை தேர்ந்தெடுத்துக்கொள்ளக் கூடிய சூழல் உருவாகியிருப்பதாகவும், தற்போது காஷ்மீரில் அமைதி திரும்பியுள்ளதாகவும் கூறியுள்ளார். பிரிவினைவாத கும்பல்கள் தான் மத்திய அரசின் நடவடிக்கையால் ஆடிப்போய் உள்ளதாகவும், காஷ்மீர் மக்கள் ஏற்றுக்கொண்டதாகவும் கூறினார்.

    English summary
    central minisiter prtap sarangi says who cannaot accept vandemadaram have no right to live india
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X