For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிஆர்பிஎஃப் வீரர்கள் பலி: ஹோலி கொண்டாட்டத்தை புறக்கணித்தார் ராஜ்நாத் சிங்

சத்தீஸ்கர் மாநிலத்தில், சுக்மா மாவட்டத்தில் நக்சல்கள் தாக்குதல் நடத்தியதில் 12 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணமடைந்ததை அடுத்து இன்று ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் புறக்

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

டெல்லி: சத்தீஸ்கர் மாநிலத்தில், சுக்மா மாவட்டத்தில் நக்சல்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 சிர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்ததை அடுத்து, வடமாநிலங்களின் முக்கிய பண்டிகையான ஹோலி பண்டிகை கொண்டாடுவதை இன்று கொண்டாடமல் தவிர்த்தார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்.

சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மீது நேற்று நக்சலைட்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் உள்பட 12 பேர் வீரமரணம் அடைந்தனர்.

Central Minister Rajnath singh avoids the Holi Celebration since the CRPF personnels were died in Naxal Attack

சத்தீஸ்கர் மாநிலத்திலேயே நக்சல்கள் நடமாட்டம் அதிகமுள்ள பேஜா என்ற பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் நேற்று காலை வழக்கம் போல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு மறைந்திருந்த நக்சலைட்டுகள் பாதுகாப்பு படையினர் மீது சரமாரியாக துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 219 படைப் பிரிவை சேர்ந்த 12 வீரர்கள் பலியாகினர்.

தகவல் கிடைத்ததும் டெல்லியில் இருந்து சத்தீஸ்கர் மாநிலத்துக்கு விரைந்து சென்ற மத்திய உள்துறை அமை்ச்சர் ராஜ்நாத் சிங், உயிர்த் தியாகம் செய்த வீரர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், நக்சலைட்கள் நடத்திய தாக்குதலில் மத்திய ரிசர்வ் படையைச் சேர்ந்த 12 வீரர்கள் பலியான சம்பவத்துக்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், இன்று ஹோலி பண்டிகை கொண்டாடாமல் புறக்கணித்தார்.

English summary
In Chattisgarh, Naxal attack 12 CRPF personnels were sacrificed their life, so the Home Minister Rajnath Singh avoid the Holi Celebrations today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X