For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு ஆறு சதவீத அகவிலைப்படியை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த உயர்வு கடந்த ஜனவரி 1 ஆம் தேதி முதல் கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் 45 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 55 லட்சம் ஓய்வூதியர்களும் பயனடைவார்கள்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் ஜனவரி, ஜூலை ஆகிய மாதங்களில் விலைவாசி நிலவரத்துக்கு ஏற்ப அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. கடைசியாக கடந்த ஆண்டு செப்டம்பரில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 7 சதவீதம் உயர்த்தப்பட்டது.

Central staff DA up by 6%

இந்தநிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப் படியில் ஆறு சதவீதத்தை உயர்த்த, ஆறாவது சம்பள கமிஷன் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக்குழு, இந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்டதை அடுத்து, நேற்று இதற்கான அறிவிப்பு வெளியானது.

அரசு ஊழியர்களுக்கு தற்போது, 107 சதவீதமாக வழங்கப்படும் அகவிலைப்படி, இனி, 113 சதவீதமாக உயர்த்தப்படும் ஜனவரி மாதம் முதல் முன்தேதியிட்டு இதற்கான நிலுவைத் தொகைகள் வழங்கப்படும் எனவும் அறிவிக்க பட்டுள்ளது இதன் மூலம், 45 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 55 லட்சம் ஓய்வூதியர்களும் பயனடைவர்

English summary
In a bonanza to over one crore Central Government employees and pensioners, the Cabinet today hiked Dearness Allowance (DA) by 6 per cent to 113 per cent of their basic pay with effect from January.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X