For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டெல்லி உள்துறை செயலாளரை நீக்கும் அதிகாரம் முதல்வர் கேஜ்ரிவாலுக்கு கிடையாது- மத்திய அரசு தடாலடி!!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: உள்துறை செயலாளரை நீக்கம் செய்த டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் உத்தரவை மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் அதிரடியாக ரத்து செய்துள்ளது.

டெல்லியில் முதல்வர் கேஜ்ரிவால் அரசுக்கும் ஆளுநர் நஜீப் ஜங்குக்கும் இடையே கடந்த சில மாதங்களாக யாருக்கு அதிகாரம்? என்கிற மோதல் நீடித்து வருகிறது.

Centre cancels Kejriwal order-reinstates Home Secretary

இந்த நிலையில் டெல்லி மாநில அரசின் உள்துறை செயலாளரான தரம்பாலை கேஜ்ரிவால் அரசு அதிரடியாக நீக்கி உத்தரவிட்டது. இதுதொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ஆளுநரின் ஒப்புதலுக்கு வழக்கம் போல அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால் டெல்லி மாநில உள்துறை செயலாளர் தரம்பாலை நீக்கும் முதல்வர் கேஜ்ரிவாலின் உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று திடீரென ரத்து செய்தது.

இதுதொடர்பான மத்திய அரசின் அறிக்கையில், உள்துறை செயலாளர் பதவியில் இருந்து தரம்பாலை நீக்கும் அதிகாரம் டெல்லி அரசுக்கு கிடையாது. உள்துறை அமைச்சகத்துக்குத்தான் உண்டு. இதனால் டெல்லி அரசின் உத்தரவு செல்லாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் டெல்லி மாநில அரசுக்கும் மத்திய அரசுக்குமான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

English summary
The Home Ministry has revoked the decision of Delhi Government to repatriate its Principal Secretary (Home) Dharam Pal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X