For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தஸ்லிமா இந்தியாவில் தங்க வழங்கப்பட்ட அனுமதி ரத்து! அதற்குப் பதில் 2 மாத சுற்றுலா விசா!!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: வங்கதேச பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினுக்கு கடந்த 10 ஆண்டுகாலமாக வழங்கப்பட்டு வந்த இந்தியாவில் தங்குவதற்கான அனுமதி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது 2 மாத கால தற்காலிக சுற்றுலா விசாவை மட்டுமே வழங்கி உள்ளது.

வங்கதேச பெண் எழுத்தாளரான தஸ்லிமான நஸ்ரின் இஸ்லாமிய அடிப்படைவாதங்களை எதிர்த்தார். அங்கு வாழும் சிறுபான்மை மக்களுக்காகவும் குரல் கொடுத்தார். இதனால் அவர் வங்கதேசத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.

அங்கிருந்து வெளியேறி இந்தியாவுக்கு வந்த தஸ்லிமா, கொல்கத்தா நகரில் நீண்டகாலம் வசித்து வந்தார். பின்னர் கொல்கத்தாவில் இருந்தும் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டு டெல்லி வந்தார்.

Centre cancels Taslima Nasreen's resident permit, author shocked

டெல்லியில் இருந்தும் அவர் வெளியேற்றப்பட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல நேரிட்டது. அவருக்கு சுவீடன் நாடு குடியுரிமை கொடுத்தது.

பின்னர் 2004ஆம் ஆண்டு முதல் தஸ்லிமா நஸ்ரின் இந்தியாவில் தங்குவதற்கான அனுமதியை மத்திய அரசு கொடுத்து வந்தது. தற்போது டெல்லியில் வசித்து வரும் தஸ்லிமா, இந்த அனுமதியை மேலும் ஓராண்டுக்கு புதுப்பிக்க விண்ணப்பித்திருந்தார்.

ஆனால் அவரது கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது. தஸ்லிமாவுக்கு கொடுக்கக்கப்பட்ட இந்தியாவில் தங்குவதற்கான அனுமதியை ரத்து செய்ததுடன் அவருக்கு 2 மாத கால தற்காலிக சுற்றுலா விசாவை மட்டுமே மத்திய அரசு வழங்கியுள்ளது.

இது தமக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தஸ்லிமா கூறியுள்ளார்.

English summary
Controversial Bangladeshi author Taslima Nasreen on Thursday expressed displeasure over the Indian government's cancelling her resident permit and issuing a temporary tourist visa for two months.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X