For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காஷ்மீருக்கு விரைவில் புதிய ஆளுநர்.. லிஸ்டில் முன்னாள் ராணுவ மேஜர்களின் பெயர்!

ஜம்மு காஷ்மீரில் விரைவில் புதிய ஆளுநர் நியமிக்கப்பட உள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    ஜம்மு-காஷ்மீர்: ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்தது- வீடியோ

    ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் விரைவில் புதிய ஆளுநர் நியமிக்கப்பட உள்ளார். இதற்காக முன்னாள் ராணுவ மேஜர்கள் பெயர் ஆலோசனையில் உள்ளது.

    ஜம்மு காஷ்மீரில் ஆளும் பாஜக - மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) இடையிலான கூட்டணி உடைந்தது. இதனால் அங்கு மெஹபூபா முப்தி தலைமையிலான கூட்டணி ஆட்சி முடிவிற்கு வந்துள்ளது. தற்போது அங்கு ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது.

    Centre favors an Army veteran as J&K Governor: Here are the two names

    அங்கு ஆளுநர் ஆட்சிக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த நிலையில் அம்மாநில ஆளுநர் வோரா, குடியரசு தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்துள்ளார்.

    ஆனால் காஷ்மீரின் தற்போதைய கவர்னர், நரிந்தர் நாத் வோராவின் பதவிக்காலம் இன்னும் ஐந்து நாட்களில் முடிவடைகிறது. அதன்பின் அவரின் பதவிக்காலம் சில வாரங்களுக்கு நீட்டிக்கப்படலாம். ஆனால் பதவி நீடிக்கப்படாமல், உடனடியாக புதிய ஆளுநர் நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    புதிய ஆளுநராக, விரைவில் ஒருவர் நியமிக்கப்பட உள்ளார். அவர் கண்டிப்பாக பாஜக கட்சியை சேராத, ஒருவர் என்று கூறப்படுகிறது. மேலும், அவர் முன்னாள் ராணுவ மேஜராக இருக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக இரண்டு முன்னாள் ராணுவ மேஜர்களின் பெயரை அரசு ஆலோசனையில் வைத்துள்ளது.

    முதற்கட்டமாக முன்னாள் மேஜர் சையத் அட்டா ஹாஸ்னாயின் பெயர் இடம்பெற்றுள்ளது. இவர் காஷ்மீரில், கார்கில் போர் சமயத்தில் பணி புரிந்தார். அப்போதே இவரது பணி எல்லோராலும் பாராட்டப்பட்டது. இவர் காஷ்மீர் நிலவரம் குறித்து நன்கு அறிந்தவர்.

    அதற்கு அடுத்தபடியாக ஜி டி பக்ஷி ஆளுநராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. காஷ்மீரில் பிறந்து வளர்ந்த இவர் இந்திய ராணுவத்தில் மேஜராக பணிபுரிந்துள்ளார். இவரும் மிக சிறப்பாக பணியாற்றியவர் என்பதால் இவரது பெயரும் பரிந்துரையில் உள்ளது.

    English summary
    Sources say that the Government is in favour of appointing a person from an Army background as the next Governor of Jammu and Kashmir. The name that is on top is that of Syed Ata Hasnain. The other name doing the rounds is that of G D Bakshi. Sources say that the favourite to get the post of Governor is Syed Ata Hasnain. He has very good knowledge of Kashmir and has handled the crisis back in 2010 well, which earned him praise.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X