For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேரளா ஆளுநர் சதாசிவம், ஆ. ராசா உட்பட 31 வி.ஐ.பி.களுக்கான மத்திய பாதுகாப்பு வாபஸ்!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: கேரளா ஆளுநர் சதாசிவம், லோக்சபா முன்னாள் சபாநாயகர் மீரா குமார், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா உட்பட 31 வி.ஐ.பி.களுக்கான மத்திய அரசின் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

தமிழகத்தை சேர்ந்த பி.சதாசிவம் தற்போது கேரளாவில் ஆளுநராக உள்ளார். அவருக்கு அளிக்கப்பட்ட மத்திய பாதுகாப்பு வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு அந்த மாநில பாதுகாப்பு வழங்கப்படுவதால் இம்முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Centre govt. withdraws security cover of 31 VIPs including Meira Kumar, Raja

முன்னாள் லோக்சபா சபாநாயகர் மீராகுமாருக்கு அளிக்கப்பட்ட மத்திய பாதுகாப்பும் வாபஸ் பெறப்பட்டது. முன்னாள் மத்திய மந்திரி சுஷில்குமார் ஷிண்டேவுக்கும் அவரது குடும்பத்தில் 8 பேருக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. இதுவும் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவுக்கு மாநில பாதுகாப்பு வழங்கப்படுவதால் அவருக்கு அளிக்கப்பட்டு வந்த மத்திய பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது.

இதேபோல் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, சுபோத்காந்த் சகாய், வி.நாராயணசாமி, உள்ளிட்ட 31 பேருக்கான மத்திய பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டிருக்கிறது.

English summary
8 family members of former Union Home Minister Sushil Kumar Shinde, former Lok Sabha Speaker Meira Kumar, two former Chief Justices of India are among 31 VIPs whose security cover have been withdrawn by the Central government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X