For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காஷ்மீர் கலவரத்தை ஒடுக்க பெல்லட் குண்டுகளுக்கு பதிலாக புது குண்டு.. இதில் என்ன விஷேசம்?

By Mathi
Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: பெல்லட் குண்டுகளை பயன்படுத்தி காஷ்மீரில் கலவரத்தை அடக்கியதற்காக விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது பாதுகாப்பு படை. கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பெல்லட் குண்டுகளுக்கு பதிலாக 'பவா' குண்டுகளை பயன்படுத்த உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தனது சமீபத்து காஷ்மீர் பயணத்தின்போது உறுதியளித்துவிட்டு வந்துள்ளார்.

புதுவகை குண்டுகளில் மிளகாய் பொடி ஃப்ளேவர் உள்ளடங்கி இருக்கும் என கூறப்படுகிறது.

பவா வகை குண்டுகள் குறித்த மேலதிக தகவல் இதுதான்:

இதில் மிளகு மற்றும் மிளகாய் ஃப்ளேவர் இருக்கும். பெல்லட் புல்லட்டுகளை போன்றே கூட்டத்தை கலைக்க கூடிய சக்தி இருப்பினும், இதனால் சேதம் குறைவு.

Centre may replace pellet guns with PAVA shells

இந்த குண்டுகளில் இருந்து வெளிவரும், வாடை மனிதர்களுக்கு ஒத்துக்கொள்ளாது. கண்ணீர் புகை குண்டைவிடவும் மோசமான எரிச்சலை இது கொடுக்கும்.

பவா குண்டுகள் மத்திய பிரதேச மாநிலம் குவாலியரிலுள்ள எல்லை பாதுகாப்பு படை தளவாட உற்பத்தி மையத்தில் தயாரிக்கப்படுகிறது. முதல்கட்டமாக 50 ஆயிரம் குண்டுகள் தயாரிக்க ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

English summary
Centre may replace pellet guns with PAVA shells. Here all you want to know about them.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X