For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தலித் என்ற வார்த்தையை ஆவணங்களில் பயன்படுத்த கூடாது.. மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

தலித் என்ற வார்த்தையை எந்த அரசு ஆவணங்களிலும் பயன்படுத்த கூடாது என்று மத்திய அரசு மாநில அரசுக்கு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

டெல்லி: தலித் என்ற வார்த்தையை எந்த அரசு ஆவணங்களிலும் பயன்படுத்த கூடாது என்று மத்திய அரசு மாநில அரசுக்கு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

தற்போது இந்தியா முழுக்க தலித் மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் செய்யப்பட மாற்றத்திற்கு எதிராக அவர்கள் போராடுகிறார்கள்.

இதில் பெரிய கலவரமும் ஏற்பட்டு இருக்கிறது. இந்த கலவரம் காரணமாக 9 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். இந்த நிலையில் மத்திய அரசின் இந்த அறிக்கை குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

என்ன சட்டம்

என்ன சட்டம்

கடந்த மார்ச் 20ம் தேதி உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கியது. அதன்படி தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இன மக்கள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்படி இனி அரசு ஊழியர்களை கைது செய்ய முடியாது என்று கூறியது. இது அந்த சட்டத்தையே கேள்விக்குறியாக்கியது. இதற்கு எதிராக இந்தியா முழுக்க தலித் மக்கள் போராடி வருகிறார்கள். இதுஇயல்பு வாழ்க்கையை பாதித்து இருக்கிறது.

உத்தரவு

உத்தரவு

இந்த நிலையில் இந்த தீர்ப்பு வருவதற்கு 5 நாட்களுக்கு முன்பு மார்ச் 15ம் தேதி மத்திய அரசு மாநில அரசுக்கும், தேர்தல் ஆணையத்திற்கும், அரசு அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பி இருக்கிறது. அதில் இனி அரசு ஆவணங்கள் எதிலும் தலித் என்ற வார்த்தையை பயன்படுத்த கூடாது என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள். அப்படி பயன்படுத்தினால் அந்த சுற்றறிக்கையை எடுத்துக் கொள்ள முடியாது என்றுள்ளனர்.

என்ன வார்த்தை பயன்படுத்த வேண்டும்

என்ன வார்த்தை பயன்படுத்த வேண்டும்

இந்த தலித் என்ற வார்த்தைக்கு பதிலாக பிற்படுத்தப்பட்ட மக்கள், பட்டியலின மக்கள் என்ற வார்த்தைகளை பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளது. அதேபோல் ஆதிதிராவிடர், அருந்ததியர் என்ற என்ற வார்த்தைக்கு பதில் எஸ்.டி என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏப்ரல் ஒன்றில் இருந்து இதை கடைபிடிக்க கூறியுள்ளனர்.

காரணம்

காரணம்

இதற்கு மத்திய அரசு அந்த உத்தரவு கடிதத்திலேயே விளக்கம் அளித்துள்ளது. அதன்படி தலித் என்ற வார்த்தை யாரை குறிப்பிட பயன்படுத்தலாம் என்று இந்திய சட்ட புத்தகத்தில் விளக்கம் இல்லை, தலித் என்பதை ஜாதி பெயர் என்றுதான் கொள்ள முடியுமே தவிர, பல ஜாதிகள் கொண்ட பிரிவு மக்களை குறிப்பிட பயன்படுத்த முடியாது என்று கூறியுள்ளது. இதனால் எஸ்.சி, எஸ்.டி என்ற வார்த்தையை மட்டும் பயன்படுத்தும்படி கூறியுள்ளது.

English summary
Centre orders state governments not to use the word ‘Dalit’ in official docs. It directs them to use only SC and ST in their documents.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X