For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

7 பேரை விடுவிப்பது குறித்த தமிழக அரசின் கடிதத்தை ஆய்வு செய்த பிறகே முடிவு: ஷிண்டே

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேரை விடுவிப்பது குறித்து தமிழக அரசு கடிதம் அனுப்பிய பிறகு அதை ஆய்வு செய்வோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது குறித்து 3 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசுக்கு கெடு விதித்துள்ளார்.

Centre to review TN govt's move to free Rajiv's assassination convicts

இந்நிலையில் இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறுகையில்,

அந்த 7 பேரை விடுதலை செய்வது குறித்த தமிழக அரசின் கடிதம் வந்ததா என்று நானும் காலையில் இருந்தே எனது அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஆனால் இன்னும் கடிதம் வரவில்லை. கடிதம் வந்தபிறகு அதை ஆய்வு செய்து உரிய முடிவு எடுப்போம் என்றார்.

English summary
Home minister Sushil Kumar Shinde told that centre will examine the Tamil Nadu Government’s move to set free all seven convicts in the Rajiv Gandhi assassination case and take appropriate view.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X