For Daily Alerts
Just In
பிரதமருக்கு சுயமரியாதையைவிட பதவி நாற்காலிதான் ரொம்ப முக்கியம்..: சாடும் பாஜக

தண்டனை பெற்ற எம்.பி., மத்திய அரசின் அவசரச் சட்டம் குறித்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி வெளிப்படையாக விமர்சித்ததையடுத்து பிரதமர் மன்மோகன் சிங் ராஜினாமா செய்வார் என்று கருதப்பட்டது. ஆனால் ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்று மன்மோகன்சிங் கூறிவிட்டார்.
இது குறித்து பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், வெளியுறவுச் செயலாளராக ஏ.பி.வெங்கடேஸ்வரன் இருந்தபோது அவரை அப்போதைய பிரதமர் ராஜிவ்காந்தி வெளிப்படையாகக் கண்டித்தார். ஒரு மணிநேரத்துக்குள் வெங்கடேஸ்வரன் தமது பதவியை ராஜினாமா செய்தார்.
ஆனால் இந்தியா போன்ற பெரிய நாட்டின் பிரதமரோ நாற்காலியில் ஒட்டிக் கொண்டிருப்பதுதான் முக்கியம் என்று முடிவு செய்துள்ளார். பிரதமருக்கு சுயமரியாதையை விட நாற்காலிதான் முக்கியம் என்றால் நாம் என்ன சொல்வது? என்றார்.