For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவை புறக்கணித்த கலைஞர்களின் இருக்கைகள் நீக்கம்

தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவை புறக்கணித்த கலைஞர்களின் இருக்கைகளை மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் நீக்கியது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

டெல்லி: தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவை புறக்கணித்த கலைஞர்களின் இருக்கைகளை டெல்லி விஞ்ஞான் பவனில் இருந்து மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் நீக்கியது.

2017-ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் விருதுக்கு தேர்வான கலைஞர்கள் 11 பேருக்கும் மட்டுமே குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டது.

Chairs removed in Vigyag Bhavan those who boycotts award receiving fucntion

இதற்கு கண்டனம் தெரிவித்து 60-க்கும் மேற்பட்டோர் விழாவை புறக்கணிக்கப் போவதாக கூறி டெல்லி அசோகா ஹோட்டலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும் இந்த விழா விஞ்ஞான் பவனில் தொடங்கியது.

விருதாளர்களுக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறார். இந்நிலையில் தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடமிருந்து விருதுகளை வாங்க மறுத்து விழாவை புறக்கணித்த திரைக் கலைஞர்களுக்கான இருக்கைகளை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் நீக்கியுள்ளது.

65 ஆண்டுகால நடைமுறைப்படி ஜனாதிபதியே தேசிய விருது வழங்க வேண்டும் என்ற விதியை மாற்றியதற்கு கலைஞர்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் அமைச்சர் ஸ்மிருதி கையால் விருது வாங்கவும் விருப்பம் இல்லை என கலைஞர்கள் கருத்து தெரிவித்தனர்.

English summary
Information Technology Ministry removes the chairs for those who boycott 65th National Film awards who oppose receive awards from Smriti Irani instead President of India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X