For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மமதா மேற்குவங்கத்தின் பெண் புலி... சந்திரபாபு நாயுடு புகழாரம்

Google Oneindia Tamil News

கொல்கத்தா: மமதா பானர்ஜி மேற்கு வங்கத்தின் புலி என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு புகழாரம் சூட்டியுள்ளார்.

பிரதமர் மோடி ஆந்திர அரசுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என கூறி கடந்த ஆண்டு கூட்டணியில் இருந்து விலகி, மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்றது சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி.

அன்று முதல் பாஜக அரசுக்கு எதிராகவும் பிரதமர் மோடிக்கு எதிராகவும் வரிந்துக்கட்டிக்கொண்டு செயல்பட்டு வருகிறார் சந்திரபாபு நாயுடு. மோடி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்ற இலக்குடன் பல்வேறு தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்தி வருகிறார்.

பெண் புலி

பெண் புலி

இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளர்களுக்காக ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு பிரச்சாரம் செய்தார். அப்போது ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, மேறுகு வங்க முதல்வர் மமதா பானர்ஜியை மேற்கு வங்கத்தின் பெண் புலி என்று வர்ணித்தார்.

நாடே நினைக்கும்

நாடே நினைக்கும்

காரக்புர் தொகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மமதாவுடன் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்தார் சந்திரபாபு நாயுடு. அப்போது பேசிய அவர், இன்று வங்கம் நினைப்பதை இந்தியாவே நாளை நினைக்கப்போகிறது என்றார்.

23ஆம் தேதி கூட்டம்

23ஆம் தேதி கூட்டம்

ஏற்கனவே டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து மே 21ம்தேதி பாஜக வுக்கு எதிரான அனைத்து கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தையும் கூட்டுவதற்காக ஒப்புதல் பெற்றுள்ளார் சந்திரபாபு நாயுடு.

கொல்கத்தாவில் பிரச்சாரம்

கொல்கத்தாவில் பிரச்சாரம்

இந்நிலையில் கொல்கத்தாவில் அவர் மமதா பானர்ஜியுடனும் பேச்சு நடத்தி அவருக்கு ஆதரவாக திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து மேற்குவங்கத்தின் பல பகுதிகளில் பிரச்சாரமும் செய்துள்ளார்.

English summary
Chandra babu Naidu praising Mamata is a woman tiger of Bengal. Andhra Pradesh Cheif Minister Chandra Babu Naidu campaigning in west bengal for supporting TMC candidates.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X