For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பேரன் பிறந்தநாள்... திருப்பதி அன்னதானத்திற்கு ரூ.26 லட்சம் காணிக்கை கொடுத்த சந்திரபாபு நாயுடு

ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது பேரனின் பிறந்தநாளை முன்னிட்டு ரூ.26 லட்சத்தை திருப்பதி கோயிலுக்கு காணிக்கை செலுத்தியுள்ளார்.

By Mayura Akhilan
Google Oneindia Tamil News

Recommended Video

    பேரன் பிறந்தநாள்... அன்னதானத்திற்கு ரூ.25 லட்சம் கொடுத்த சந்திரபாபு நாயுடு

    திருப்பதி: ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது பேரன் பிறந்தநாளையொட்டி திருப்பதி கோயில் அன்னப்பிரசாத திட்டத்திற்கு ரூ25 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார்.

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செயல்படுத்தப்படும் ஸ்ரீவெங்கடஸ்வர நித்ய அன்னப்பிரசாத அறக்கட்டளைக்கு பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள், நிறுவனத்தினர் நன்கொடை வழங்கி வருகின்றனர்.
    இந்நிலையில், ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பேரன் தேவ்னேஷின் 4வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, முதல்வர் சந்திரபாபு நாயுடு திருப்பதி ஏழுமலையான் கோயில் அன்னப்பிரசாத திட்டத்திற்காக ரூ25 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார். தேவ்னேஷ் பெயரில் நேற்று பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது.

    திருப்பதி கோவில் தரிசனம்

    திருப்பதி கோவில் தரிசனம்

    ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பேரன் நர தேவன்ஷ். மூன்று வயதாகும் இச்சிறுவனின் பிறந்தநாளை முன்னிட்டு புதன்கிழமை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்ற சந்திரபாபு ஏழுமலையானை தரிசனம் செய்தார். ஆந்திரா மக்களின் மகிழ்ச்சிக்காகவும், வளர்ச்சிக்காகவும் பிரார்த்தனை செய்ததாக சந்திரபாபு நாயுடு கூறினார்.

    ரூ. 26 லட்சம் காணிக்கை

    ரூ. 26 லட்சம் காணிக்கை

    ஏழுமலையான் கோயிலில் ஒரு நாளைக்கு பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னப்பிரசாத திட்டத்திற்காக ரூ25 லட்சம் செலவு செய்யப்படுகிறது. பேரன் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதான திட்டத்திற்கு ரூ. 26 லட்சம் காணிக்கையாக வழங்கினார். இதனை தனது பேரன் பெயரிலேயே காணிக்கையாக செலுத்தியுள்ளார் நாயுடு.

    குடும்பத்துடன் தரிசனம்

    குடும்பத்துடன் தரிசனம்

    சந்திரபாபுவுடன் தரிசனத்துக்காக அவரது மகன் நர லோகேஷ்மற்றும் அவரது மனைவி நர பிஹ்மணி மற்றும் நடிகரும் சந்திரபாபுவின் சம்பந்தியுமான பாலகிருஷ்ணா எம்எல்ஏ ஆகியோரும் உடன் சென்றனர். அனைவரும் கோவில் அன்னதான கூடத்தில் சாப்பிட்டனர்.

    தாத்தாவை மிஞ்சிய பேரன்

    தாத்தாவை மிஞ்சிய பேரன்

    ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஒவ்வொரு ஆண்டும் தனது சொத்து விவரங்களை வெளியிடுவார். கடந்த ஆண்டு வெளியிட்ட சொத்து மதிப்பில் தேவ்னேஷ்ஷின் சொத்து மதிப்பு அவரை தாத்தாவை மிஞ்சி விட்டதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Chief Minister of Andhra Pradesh Chandrababu Naidu along with his family offered prayers at the Lord Venkateswara Temple in Tirumala on Wednesday on the occasion of the fourth birthday of his grandson Devansh.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X