For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஆண்டுக்கு ரூ.2 லட்சம்.. சந்திரபாபு நாயுடு கவர்ச்சி வாக்குறுதி

Google Oneindia Tamil News

அமராவதி: காங்கிஸ் ஆட்சிக்கு தாங்கள் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு ரூ.72 ரூபாய் வழங்குவோம் என அறிவித்துள்ள நிலையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தன்னடைய தெலுங்குதேசம் கட்சி மீண்டும் ஆந்திராவில் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வருவாய் வழங்குவோம் என அறிவித்துள்ளார்.

அண்மையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட அக்கட்சியின் தலைவர் ராகுல்காந்தி, மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்தார். இதனால் பாஜக உள்ளிட்ட கட்சிகள் அதிர்ச்சியில் உள்ளன. இது சாத்தியம் இல்லாத வாக்குறுதி, மக்களை ஏமாற்றுவதற்காக காங்கிரஸ் இது போன்ற வாக்குறுதிகளை வழங்குவதாக குற்றம்சாட்டி வருகின்றன.

Chandrababu Naidu releases TDP manifesto, he minimum income for poor, assures Rs 2 lakh per family per year

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கைக்கு போட்டி போடும் வகையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கு தேசம் கட்சியின் தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளார். அதில், ஒவ்வொரு குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.2லட்சம் குறைந்த பட்ச வருவாய் வழங்குவோம். இதேபோல் ஆந்திராவில் விவசாயிகளுக்கு ரூ.15 ஆயிரம் வரை நிதியுதவி அளிக்கும் திட்டத்தையும் நாயுடு அறிவித்துள்ளார்.

ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமாரா? ரவிச்சந்திரகுமாரா? கன்பியூஸ் ஆன எடப்பாடி ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமாரா? ரவிச்சந்திரகுமாரா? கன்பியூஸ் ஆன எடப்பாடி

மேலும் உயர்கல்வி இலவசமாக அளிக்கப்படும் என்றும், வெளிநாட்டில் போய் படித்தால் 25 லட்சம் நிதியுதவி, மகளிர் சுயஉதவிக்குழுவில் ஒவ்வொருவருக்கும் 10ஆயிரம் என பல கவர்ச்சி வாக்குறுதிகளை சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

அதேநேரம் ஆந்திராவில் எதிர்க்கட்சியான ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும் தெலுங்கு தேசம் கட்சிக்கு போட்டியாக பல கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அறிவித்துள்ளது. இதனால் ஆந்திராவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படும் என சந்திராபு நாயுடுவோ, ஜெகன்மோகன் ரெட்டியோ மறந்தும் அறிவிக்கவில்லை.

English summary
AP CM Chandrababu Naidu releases TDP manifesto, he promises minimum income for poor, assures Rs 2 lakh per family per year
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X