For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாஜகவில் ஐக்கியமானது பினாமியாம்- சந்திரபாபு நாயுடுவின் அடேங்கப்பா பகீர் நாடகம்

Google Oneindia Tamil News

அமராவதி: தெலுங்குதேசம் கட்சியில் இருந்து 4 எம்.பி.கள் பாஜகவுக்கு தாவியதில் அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு 'நாடகமா'டுவதாக ஆந்திரா தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெலுங்குதேசம் கட்சியின் ஒய்.எஸ். சவுத்ரி உள்ளிட்ட 4 ராஜ்யசபா எம்.பி.க்கள் திடீரென பாஜகவுக்கு தாவுவதாக அறிவித்தனர். இது ஆந்திராவுக்கு செய்கிற துரோகம் என வெளிநாட்டில் இருந்தபடியே ட்விட்டரில் சந்திரபாபு நாயுடு பதிவிட்டிருந்தார்.

Chandrababus High drama with RS MPs jump to BJP

ஆனால் நம்மிடம் பேசிய ஆந்திரா பத்திரிகையாளர்கள் சொல்லும் தகவல்கள் பகீர் ரகமாக இருக்கிறது. இதுபற்றி கூறும் அவர்கள், தற்போது பாஜகவுக்கு மாறிய 4 எம்.பி.க்களும் ஆந்திரா அரசியலை தீர்மானிக்கும் சக்தி படைத்த தொழிலதிபர்கள்.

ஏலத்திற்கு வந்த விஜயகாந்த்தின் சொத்துக்கள்.. தேமுதிகவினர் பேரதிர்ச்சி! ஏலத்திற்கு வந்த விஜயகாந்த்தின் சொத்துக்கள்.. தேமுதிகவினர் பேரதிர்ச்சி!

அதனால்தான் பாஜகவே ஒய்.எஸ். சவுத்ரி, சி.எம். ரமேஷ் ஆகியோரை ஆந்திராவின் விஜயமல்லையாக்கள் என விமர்சித்தது. இதில் ஒய்.எஸ்.சவுத்ரி, சந்திரபாபு நாயுடுவுக்கு பல வகைகளில் மிகவும் நெருக்கமான, நம்பிக்கைக்குரியவர்.

இந்த சவுத்ரியை நீண்டகாலமாகவே பாஜக குறிவைத்திருந்தது. சிபிஐ சோதனைகள், அமலாக்கப் பிரிவு சோதனைகள், வருமான வரி சோதனைகள் என அத்தனை நெருக்கடியும் கொடுத்து வந்தது பாஜக.

இந்த பிரச்சனைகளில் தாமும் சிக்காமல் இருக்க சவுத்ரியும் சிறைக்கு போகாமல் இருக்க சந்திரபாபு நாயுடு தடாலடி திட்டம் தீட்டினாராம். அவரது யோசனைப்படியேதான் தற்போது ஒய்.எஸ். சவுத்ரியை பாஜக பக்கம் தாவ வைத்திருக்கிறாராம்.

இப்படிச் செய்ததன் மூலம் சவுத்ரியை பாதுகாத்து தாமும் தப்பிவிட்டார் சந்திரபாபு நாயுடு என்கின்றன.

English summary
Sources said that TDP President Chandra Babu Naidu's high drama with in the Rajya Sabha MPs jumping to the BJP.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X