For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மோதுவதற்கு முன்.. மோதிய பின்.. விக்ரம் லேண்டரால் நிலவில் ஏற்பட்ட மாற்றம்.. ஷாக்கிங் வீடியோ!

விக்ரம் லேண்டர் நிலவில் மோதிய பின் நிலவின் தரை பகுதியில் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்பட்டது என்ற விவரம் வெளியாகி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    How did Shanmuka Subaramanyam help NASA

    சென்னை: விக்ரம் லேண்டர் நிலவில் மோதிய பின் நிலவின் தரை பகுதியில் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்பட்டது என்ற விவரம் வெளியாகி உள்ளது.

    நிலவின் தென் பகுதியை ஆராய்ச்சி செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டர் நிலவில் மோதி உடைந்தது உறுதியாகி உள்ளது. விக்ரம் லேண்டரில் இருந்த பிரக்யான் ரோவரும் இதனால் உடைந்து சேதம் அடைந்துள்ளது உறுதியாகி உள்ளது.

    நாசா ஆராய்ச்சி நிறுவனம்தான் இதற்கான அறிவிப்பை இன்று வெளியிட்டது. சென்னை எஞ்சினியர் சண்முக சுப்ரமணியன் கொடுத்த க்ளூவின் அடிப்படையில்தான் இந்த கண்டுபிடிப்பை நாசா நிகழ்த்தி இருக்கிறது.

     சந்திரயான் 2.. ஆதி முதல் அந்தம் வரை.. எல்லாமே தமிழர்கள்தான்.. வியந்து பார்க்கும் வடஇந்தியா! சந்திரயான் 2.. ஆதி முதல் அந்தம் வரை.. எல்லாமே தமிழர்கள்தான்.. வியந்து பார்க்கும் வடஇந்தியா!

    விக்ரம் லேண்டர்

    விக்ரம் லேண்டர்

    இந்த நிலையில் விக்ரம் லேண்டர் நிலவில் மோதுவதற்கு முன்பும், மோதிய பின்பும் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்த வீடியோக்கள் வெளியாகி உள்ளது. நாசா எஞ்சினியர்களால் இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. விக்ரம் லேண்டர் நிலவில் மோதியதால் என்ன மாற்றம் ஏற்பட்டது, எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டது என்று இதன் மூலம் உறுதியாகி உள்ளது.

    இரண்டு புகைப்படம்

    இரண்டு புகைப்படம்

    விக்ரம் லேண்டர் விழும் முன் எடுக்கப்பட்ட புகைப்படம், விழுந்த பின் எடுக்கப்பட்ட புகைப்படம் இரண்டையும் இணைத்து கிஃப் பைலாக இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. நிலவில் மேற் பகுதியில் முதலில் எந்த விதமான பாதிப்பும் இல்லாமல் இருந்துள்ளது. அதன்பின், அங்கு விக்ரம் லேண்டர் வேகமாக மோதி உள்ளது.

    புழுதி படலம்

    இதனால் அங்கு பெரிய அளவில் புழுதி படலம் உருவாகி உள்ளது. அதன்பின் அங்கு சில இடங்களில் குழிகள் உருவாகி உள்ளது. அங்கு 2 கிமீ சுற்றுப்பகுதி இதனால் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இது அந்த வீடியோ மூலம் தெளிவாக தெரிகிறது.

    கொஞ்சம் தள்ளி

    கொஞ்சம் தள்ளி

    அது மட்டுமின்றி நிலவில் விக்ரம் லேண்டர் இறங்க வேண்டிய இடத்தில் இருந்து சரியாக 1 கிமீ தூரத்தில் தள்ளி விழுந்துள்ளது. இன்னும் கொஞ்சம் துல்லியமாக விக்ரம் லேண்டர் வேலை செய்து இருந்தால், ஒருவேளை அது சரியாக நிலவில் இறங்கி இருக்க கூட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

    English summary
    Chandrayaan 2: Before and After the effects of Vikram Lander on the moon surface revealed.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X