For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தைரியமாக இருங்கள்.. நான் உங்களுடன் இருக்கிறேன்.. இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு மோடி நம்பிக்கை!

தைரியமாக இருங்கள், நான் உங்களுடன் இருக்கிறேன் என்று பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகள் முன்னிலையில் உரையாற்றி இருக்கிறார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    கண்ணீர் மல்கிய சிவன்.. வாரி அணைத்து, தட்டி கொடுத்து மோடி ஆறுதல்

    டெல்லி: தைரியமாக இருங்கள், நான் உங்களுடன் இருக்கிறேன் என்று பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகள் முன்னிலையில் உரையாற்றி இருக்கிறார்.

    நிலவிற்கு மிக அருகில் சென்ற சந்திரயான் 2, தற்போது நிலவில் இறங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கப்படுவதாக திட்டமிடப்பட்டு இருந்த சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டருடன் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

    இதனால் சந்திரயான் 2 நிலவில் இறங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சந்திரயான் 2ல் இருக்கும் லேண்டருடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்த இஸ்ரோ தீவிரமாக முயன்று வருகிறது.

    கண்ணீர் மல்கிய இஸ்ரோ தலைவர் சிவன்.. வாரி அணைத்து, தட்டி கொடுத்து மோடி ஆறுதல்.. உணர்ச்சி மிகு வீடியோகண்ணீர் மல்கிய இஸ்ரோ தலைவர் சிவன்.. வாரி அணைத்து, தட்டி கொடுத்து மோடி ஆறுதல்.. உணர்ச்சி மிகு வீடியோ

    சந்திரயான் 2 எப்படி

    இந்த நிலையில் சந்திரயான் 2 குறித்து இஸ்ரோ இயக்குனர் சிவன் பேட்டி அளித்தார். அதில், சந்திரயான் 2ல் உள்ள விக்ரம் லேண்டர் 2.1 கிமீ வரை சரியாக இறங்கியது.அதன்பின் விக்ரம் லேண்டர் உடன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து ஆலோசனை நடந்து வருகிறது. டேட்டாக்களை சோதனை செய்து வருகிறோம், என்று குறிப்பிட்டார்.

    என்ன ஸ்பின்னர்

    என்ன ஸ்பின்னர்

    இதையடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் பிரதமர் மோடி உரையாற்றினார். அதில், நம்பிக்கையாக இருங்கள். நாடு உங்களை நினைத்து பெருமை கொள்கிறது.நாம் மீண்டும் முயற்சி செய்வோம்.எல்லோருக்கும் என்னுடைய வாழ்த்துகள். நாம் இந்த பயணத்தை தொடர்வோம்.நான் உங்களுடன் இருக்கிறேன், என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.

    மேலும் என்ன

    மேலும் என்ன

    இது தொடர்பாக பிரதமர் மோடி செய்துள்ள டிவிட்டில், இந்தியா தனது விஞ்ஞானிகளை நினைத்து பெருமை கொள்கிறது. அவர்கள் தங்களால் முடிந்ததை சிறப்பாக கொடுத்துள்ளனர். இந்தியாவை எப்போதும் அவர்கள் பெருமைக்கு உள்ளாக்கி உள்ளனர். நாம் தைரியமாக இருக்க வேண்டிய நேரம் இது.

    தொடர்ந்து

    தொடர்ந்து

    நாம் தைரியமாக இருப்போம். இஸ்ரோ இயக்குனர் என்னிடம் இது குறித்து விளக்கம் கொடுத்தார். நாம் நம்பிக்கையுடன் இருப்போம். தொடர்ந்து நம்முடைய ஸ்பேஸ் ஆராய்ச்சிகளை செய்து வருவோம், என்றுள்ளார்.

    English summary
    Chandrayaan 2: I am with you, Stay strong says PM Modi to Isro scientists.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X