For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செப்டம்பர் 7ம் தேதி அதிகாலை 1.55 மணி.. நிலவின் தென் துருவத்தில் கலக்கலாக தரையிறங்கும் சந்திரயான் 2

Google Oneindia Tamil News

Recommended Video

    Chandrayaan 2 | நிலவின் சுற்றுவட்டப் பாதையை அடைந்தது சந்திரயான்-2- வீடியோ

    சென்னை: செப்டம்பர் 7ம் தேதி அதிகாலை 1.55 மணிக்கு நிலவில் சந்திரயான் 2 தரை இறங்குகிறது என்று இஸ்ரோ தலைவர் கே சிவன் தெரிவித்தார்.

    புவி சுற்றுப்பாதையில் இருந்து பிரிந்த சந்திரயான்-2 இன்று காலை 9 மணி 30 நிமிடம் அளவுக்கு நிலவின் சுற்றுப்பாதையில் சென்றது. இதையடுத்து செப்டம்பர் 7ம் தேதி அடுத்த மிகப்பெரிய நிகழ்வாக, நிலவில் சந்திரயான் 2, தரை இறங்க உள்ளது.

    Chandrayaan-2 is all set to for Moon landing at 1.55am on September 7

    தொடர்ந்து நிலவின் சுற்று வட்டப்பாதையிலேயே வலம் வரும் விண்கலம் செப்டம்பர் 1ம் தேதி வரை படிப்படியாக 4 முறை சுற்று வட்டப்பாதை அளவு குறைக்கப்பட்டு இறுதியாக நிலவின் பரப்பில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவிலான சுற்றுப்பாதையில் சுற்றி வரும் வகையில் விண்கலம் நிறுத்தப்படும்.

    செப்டம்பர் 2ம் தேதி, ஆர்பிட்டரிலிருந்து லேண்டர் தனியாக பிரிக்கப்படும். அவ்வாறு பிரிக்கப்படும் லேண்டர் அமைப்பு தொடர்ந்து 4 நாட்கள் நிலவை சுற்றிவரும். அப்போது 2 முறை அதன் சுற்று வட்டப்பாதை அளவு குறைக்கப்பட்டு இறுதியாக செப்டம்பர் 7ம் தேதி நிலவின் தென்துருவத்தில் தரை இறக்கப்பட உள்ளது.

    நிலவின் சுற்றுப் பாதையில் சந்திராயன்-2.. 30 நிமிடம் ரொம்ப டென்ஷனாகிவிட்டோம்.. இஸ்ரோ தலைவர் சிவன்நிலவின் சுற்றுப் பாதையில் சந்திராயன்-2.. 30 நிமிடம் ரொம்ப டென்ஷனாகிவிட்டோம்.. இஸ்ரோ தலைவர் சிவன்

    முன்னதாக செப்டம்பர் 2 ஆம் தேதி, செப்டம்பர் 3 ஆம் தேதி லேண்டர் சரியாக செயல்படுகிறதா என்று மூன்று விநாடிகள் ஒரு அவசர பரிசோதனை செய்து பார்க்கப்படும்.

    செப்டம்பர் 4 ஆம் தேதி அதிகாலை 1.40 மணிக்கு விண்கலத்திலிருந்து லேண்டர் பிரித்தெடுக்கும் பணி ஆரம்பிக்கும். 1 மணி 55 நிமிடங்களுக்கு லேண்டர் நிலவின் மேற்பரப்பை தொடும். அப்போது சோலார் பேனல்கள் விரிவடைந்து எரிசக்தியை வழங்கும்.

    இந்த பணிகளுக்கு நான்கு மணி நேரத்துக்குப் பிறகு ரோவர் வெளியே வரும். இவ்வாறு சிவன் தெரிவித்தார்.

    English summary
    Having successfully entered the lunar orbit on Tuesday, Chandrayaan-2 is all set to for Moon landing at 1.55am on September 7.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X