For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Chandrayaan 2 Launch Live: நிலவை நோக்கிய பயணத்தை தொடங்கியது சந்திரயான் 2!

Google Oneindia Tamil News

Recommended Video

    விண்ணில் பாய தயாராகும் சந்திரயான் 2.. நிலவின் தென்துருவத்தை ஆராயும்

    ஸ்ரீஹரிகோட்டா: இந்திய விண்வெளித்துறையின் புதிய மைல் கல்லான சந்திரயான்-2 விண்கலம் இன்று பகல் 2.43 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.

    நிலவை ஆராயும் சந்திரயான் -2 விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்ப கடந்த 15-ந் தேதி திட்டமிடப்பட்டது. அப்போது தொழில்நுட்ப கோளாறால் விண்ணில் ஏவவில்லை. இதையடுத்து மீண்டும் விண்ணில் ஏவுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    இதற்கான கவுண்ட்டவுன் நேற்று மாலை 6.43 மணிக்கு தொடங்கியது. இன்று பகல் 2.43 மணிக்கு சந்திரயான் -2 விண்கலம் விண்ணில் ஏவப்பட உள்ளது.

    Newest First Oldest First
    3:32 PM, 22 Jul

    சந்திரயான் 2 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு பிரதமர் மோடி பாராட்டு ; சந்திரயான் 2 நம் விஞ்ஞானிகளின் வலிமையை பறைசாற்றுகிறது - மோடி புகழாரம்; சந்திரயான் 2 விண்கலம் செலுத்தப்பட்டது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை - பிரதமர் மோடி
    3:31 PM, 22 Jul

    நாடாளுமன்றத்தில் பாராட்டு

    சந்திரயான் -2 விண்கலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதற்கு லோக்சபா, ராஜ்யசபா பாராட்டு
    3:27 PM, 22 Jul

    “வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை”- வைரமுத்து

    சந்திராயன் -2 விண்கலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதற்கு இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    3:15 PM, 22 Jul

    இந்தியாவின் நிலவு நோக்கிய பயணத்தில் வரலாற்று சிறப்பு மிக்க தினம் இது- இஸ்ரோ தலைவர் சிவன். இந்தியா மட்டுமின்றி உலகமே இதை எதிர்நோக்கி பார்த்துக் கொண்டிருந்தது- சிவன் பேச்சு.
    3:15 PM, 22 Jul

    விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் புவிவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. சந்திரயான் விண்கலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதில் மகிழ்ச்சி- இஸ்ரோ தலைவர் சிவன். இஸ்ரோ விஞ்ஞானிகள் குடும்பத்தை மறந்து தொழில்நுட்ப கோளாறை சரிசெய்தனர்.
    2:46 PM, 22 Jul

    சந்திரயான் 2 விண்கலத்துடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்
    2:43 PM, 22 Jul

    ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது சந்திரயான். நிலவின் தென் துருவத்தில் சந்திரயாந்2 விண்கலம் இறங்கும்.
    2:36 PM, 22 Jul

    இன்னும் சற்று நேரத்தில் விண்ணில் ஏவப்படுகிறது சந்திரயான்
    10:16 AM, 22 Jul

    ஸ்ரீஹரிகோட்டாவில் குவியும் மக்கள்

    சந்திரயான் விண்ணில் ஏவப்படுவதை காண ஸ்ரீஹரிகோட்டாவில் மக்கள் குவிந்துவருகின்றனர்.
    9:28 AM, 22 Jul

    சந்திரயானுக்காக யாகம்

    சந்திரயான்-2 வெற்றிக்காக திங்களூர் சந்திரன் கோவிலில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.
    9:14 AM, 22 Jul

    நிலவை ஆராய சந்திரயான் -2 விண்கலம் விண்ணில் பகல் 2.43 மணிக்கு ஏவப்படுகிறது
    9:14 AM, 22 Jul

    சந்திரயான் விண்ணில் வெற்றிகரமாக வலம் வர கோவில்களில் சிறப்பு பூஜைகள்

    Chandrayaan to be launch today
    English summary
    Chandrayaan-2 will be launch today afternoon 2.43 pm.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X