For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சந்திரயான் 2வுடன் கதை முடிந்துவிடவில்லை.. இருக்கு இன்னும் இருக்கு.. பட்டியலிடும் இஸ்ரோ சிவன்

Google Oneindia Tamil News

டெல்லி: சந்திரயான்- 2 உடன் கதை இன்னும் முடிந்துவிடவில்லை என இஸ்ரோ தலைவர் கே சிவன் தெரிவித்துள்ளார்.

நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் வகையில் சந்திரயான் -2 என்ற விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இது ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் ஆகிய 3 அமைப்புகளை கொண்டிருந்தது. இதில் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் மெதுவாக தரையிறங்கும் போது 300 மீட்டர் தொலைவில் இஸ்ரோவுடனான இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இதனால் லேண்டருனான தொடர்பை பெற இஸ்ரோவும் நாசாவும் கடுமையாக முயற்சித்து வந்தது. எனினும் அது முடியவில்லை. ஆயினும் இது தோல்வி அல்ல, 98 சதவீதம் நாம் வெற்றி கண்டுவிட்டோம்.

உங்களுக்கு ஒரு கதை சொல்லட்டா.. காப்பி அடிக்காதீங்க.. காலி ஆயிடுவீங்க!உங்களுக்கு ஒரு கதை சொல்லட்டா.. காப்பி அடிக்காதீங்க.. காலி ஆயிடுவீங்க!

சாப்ட் லேண்டிங்

சாப்ட் லேண்டிங்

இந்த நிலையில் டெல்லியில் நடந்த ஐஐடி பட்டமளிப்பு விழாவில் இஸ்ரோ தலைவர் கே சிவன் கலந்து கொண்டார். அப்போது அவர் மாணவர்கள் மத்தியில் பேசுகையில் சந்திரயான்2 திட்டம் தொழில்நுட்பத்தை பொருத்தவரை விக்ரம் லேண்டரை மெதுவாக தரையிறங்க முடிய வைக்க இயலாமல் போய்விட்டது.

முயற்சி

முயற்சி

எனினும் நிலவின் மேல்பகுதியில் இருந்து 300 மீட்டர் வரை அனைத்தும் சரியாகவே இயங்கின. வருங்காலத்தில் நிலவில் மெதுவாக தரையிங்கும் (சாப்ட் லேண்டிங்) வகையில் எல்லாவற்றையும் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

விண்வெளிக்கு வீரர்கள்

விண்வெளிக்கு வீரர்கள்

நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க நிச்சயமாக மீண்டும் முயற்சி எடுப்போம். சந்திரயான்-2 உடன் கதை முடிந்து விடவில்லை. சூரியனை ஆராய்ச்சி செய்வதற்கு ஆதித்யா எல் 1 திட்டம், விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் ஆகியவற்றை வைத்துள்ளோம்.

செயற்கைகோள்

செயற்கைகோள்

சிறிய ரக செயற்கைகோளை செலுத்துவதற்கான ராக்கெட்டை முதல்முதலில் இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு ஜனவரியில் செலுத்துவுள்ளோம். சுமார் 200 டன் எடை கொண்ட கிரையோ என்ஜின் சோதனை விரைவில் தொடங்கப்படும். வரும் மாதங்களில் நவீன் தொழில்நுட்பம் கொண்ட ஏராளமான செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.

English summary
ISRO Chief K.Sivan says that ISRO is working for soft landing on the Moon in the South pole.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X