For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Chandrayaan-2 Launch :தொழில்நுட்ப கோளாறு.. சந்திராயன் 2 இன்று விண்ணில் ஏவப்படாது - இஸ்ரோ

Google Oneindia Tamil News

Recommended Video

    தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சந்திரயான்- 2 விண்ணில் ஏவுவது தற்காலிக நிறுத்தம்

    ஶ்ரீஹரிகோட்டா: நிலவை ஆராய்வதற்காக சந்திராயன்-2 விண்கலம் திங்கள்கிழமை அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் ஏவப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக அது தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சந்திராயன் விண்கலம்-2 மறுபடியும் எப்போது ஏவப்படும் என்பது பற்றி பின்னர் அறிவிக்கப்படும்.

    Newest First Oldest First
    2:36 AM, 15 Jul

    குரு பிரசாத், இஸ்ரோ பிஆர்ஓ: சந்திராயன் 2 விண்கலம் எப்போது ஏவப்படும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக சிறிது நேரம் காத்திருங்கள்.
    2:32 AM, 15 Jul

    ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, சந்திராயன் 2 விண்ணில் ஏவப்படுவதை பார்ப்பதற்காக வந்திருந்த 5,000 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர்.
    2:24 AM, 15 Jul

    சந்திராயன் 2 இன்று விண்ணில் ஏவப்படாது - இஸ்ரோ அறிவிப்பு
    2:21 AM, 15 Jul

    # GSLVMkIII-M1 இன் கிரையோஜெனிக் கட்டத்தில் திரவ ஹைட்ரஜனை நிரப்புதல் முடிந்தது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக கவுண்ட்டவுன் திடீரென நிறுத்தம்.
    2:17 AM, 15 Jul

    சந்திராயன் 2 இன்று அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் செலுத்தப்படவிருந்த நிலையில் கவுண்ட்டவுன் தற்காலிகமாக நிறுத்தம்
    2:14 AM, 15 Jul

    ISRO வலைத்தளமான https://bit.ly/2LTTdrp மற்றும் DD நேஷனலில் 2:30 AM முதல் நேரடி ஒளிபரப்பைப் பாருங்கள். நேரடி ஸ்ட்ரீமிங்கிலும் பார்க்கலாம்: Youtube: https://bit.ly/2G7TseH, Facebook: https://bit.ly/2EFxYEw
    1:53 AM, 15 Jul

    சந்திரயான் -2 திட்டத்திற்கான செலவு ஹாலிவுட் திரைப்படங்களின் பட்ஜெட்டை விட குறைவு. ரூ .960 கோடி செலவில் சந்திராயன் -2 உருவாக்கம்.
    1:41 AM, 15 Jul

    சந்திரயான்-2 திட்டப் பணிகள் முழுவதும் முத்தயா வனிதா, ரிது காரிதால் என்ற பெண்களின் தலைமையில் நடைபெறுவது வரலாற்று சிறப்பு வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது.
    1:34 AM, 15 Jul

    ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து சந்திராயன் 2 இன்று அதிகாலை 2:51 மணிக்கு விண்ணில் பாய்கிறது. இதனை காண்பதற்காக, மக்கள் அங்கு கூடி வருகிறார்கள்.
    1:10 AM, 15 Jul

    நிலவில் உள்ள கனிம வளங்கள், மக்கள் வாழ சாதகமான சூழல் உள்ளதா, தண்ணீர் இருப்பு போன்றவை குறித்து சந்திராயன் - 2 ஆய்வு செய்ய உள்ளது.
    1:10 AM, 15 Jul

    நிலவில் உள்ள கனிம வளங்கள், மக்கள் வாழ சாதகமான சூழல் உள்ளதா, தண்ணீர் இருப்பு போன்றவை குறித்து சந்திராயன் - 2 ஆய்வு செய்ய உள்ளது.
    1:08 AM, 15 Jul

    சந்திராயன் -2 விண்கலம் 3.84 லட்சம் கிலோமீட்டர் பயணம் செய்து வரும் செப்டம்பர் 6 தேதி நிலவில் தரையிறங்கும்
    12:57 AM, 15 Jul

    உலகில் முதல் முறையாக, நிலவின் தென்துருவ பகுதியை ஆய்வு செய்ய, 'சந்திராயன் - 2' என்ற விண்கலத்தை, 'இஸ்ரோ' அனுப்புகிறது.
    12:55 AM, 15 Jul

    நிலவை சுற்றி ஆய்வு செய்வதற்காக 'ஆர்பிட்டர்' என்ற சாதனம், நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்ய 'லேண்டர்' என்ற சாதனம், மற்றும் நிலவின் தரையில் ஊர்ந்து சென்று ஆய்வு செய்ய 'ரோவர்' என 3 சாதனங்கள் சந்திராயன் -2 ல் இடம்பெற்றுள்ளன.
    12:54 AM, 15 Jul

    ஒரு மாதத்தில் 14 நாட்கள் மட்டுமே நிலவில் விண்கலன்கள் தரையிறங்க முடியும். முழு நிலவையும் ஆய்வு செய்ய துருவ வட்டப்பாதையில் தான் செல்ல முடியும்; துருவ வட்டப்பாதையில் நிலவை சென்றடைவது என்பது மிகவும் சவாலான பணியாகும் - விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை
    12:50 AM, 15 Jul

    இந்தியாவின் பெருமைமிகு கனவு சந்திராயன் -2 2 மணிநேரங்களில் விண்ணில் பாய்கிறது
    10:02 PM, 14 Jul

    நிலவின் தோற்றம்

    ஆந்திரா; நிலவின் தோற்றம், சூரிய மண்டல தோற்றத்தின் மர்ம முடிச்சு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை சந்திராயன் - 2 விண்கலம் ஆராயும்.
    10:02 PM, 14 Jul

    நிலவு ஆராய்ச்சி

    ஆந்திரா; நிலவை ஆராய்வதற்காக சந்திராயன் - 2 விண்கலம் விண்ணில் பாய உள்ளது.
    10:02 PM, 14 Jul

    சந்திராயன்

    ஆந்திரா: சந்திராயன்-2 விண்கலம் திங்கள்கிழமை அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.

    Chandrayaan-2 to be launched tomorrow early morning
    English summary
    ISRO will launch Chandrayaan-2 on tomorrow early morning 2.51 am.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X