For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாதி வெற்றி.. ஆர்பிட்டர் இயங்கும்.. லேண்டருடன்தான் தொடர்பு துண்டிப்பு.. இஸ்ரோ கொடுத்த விளக்கம்!

சந்திரயான் 2ல் உள்ள லேண்டர் விக்ரம் உடன் தொடர்பு துண்டிக்கப்பட்டாலும், ஆர்பிட்டர் தொடர்ந்து எப்போதும் போல இயங்கும் என்று இஸ்ரோ விளக்கம் அளித்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    கண்ணீர் மல்கிய இஸ்ரோ தலைவர் சிவன்.. வாரி அணைத்து, மோடி ஆறுதல்

    டெல்லி: சந்திரயான் 2ல் உள்ள லேண்டர் விக்ரம் உடன் தொடர்பு துண்டிக்கப்பட்டாலும், ஆர்பிட்டர் தொடர்ந்து எப்போதும் போல 1 வருடம் இயங்கும் என்று இஸ்ரோ விளக்கம் அளித்துள்ளது.

    இஸ்ரோவின் சந்திரயான் 2 நிலவில் இறங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சந்திராயன் 2ல் உள்ள விக்ரம் லேண்டருடன் இஸ்ரோ தொடர்பை இழந்துள்ளது.

    இதனால் நிலவில் சந்திரயான் 2 இறக்கப்படுமா, சந்திராயன் 2ன் நிலை என்ன ஆனது என்ற கேள்வி எழுந்துள்ளது. சந்திரயான் 2ல் மூன்று முக்கிய சாதனங்கள் உள்ளது.

    லேசர் ஆராய்ச்சி.. சந்திரயான் 2 மூலம் நாசா செய்ய போகும் ரிசர்ச்.. நிலவில் இறங்கும் முக்கிய பார்சல்லேசர் ஆராய்ச்சி.. சந்திரயான் 2 மூலம் நாசா செய்ய போகும் ரிசர்ச்.. நிலவில் இறங்கும் முக்கிய பார்சல்

    முதல் சாதனம்

    முதல் சாதனம்

    சந்திரயான் 2ல் ஆர்பிட்டர் எனப்படும் நிலவை அதன் சுற்றுவட்டப்பாதையில் இருந்து ஆராயும் சாட்டிலைட் போன்ற கருவி ஒன்று.இது ஏற்கனவே நிலவின் வட்டப்பாதையை ஏற்கனவே சுற்றி வர தொடங்கிவிட்டது. நிலவில் இறங்கி அதை சோதனை செய்யும் பிரக்யான் என்று அழைக்கப்படும் ரோவர் ஒன்று.

    ஆனால் இல்லை

    ஆனால் இல்லை

    இந்த ரோவரை தரையிறக்க உதவும் விக்ரம் என்ற லேண்டர் கருவி ஒன்றும் உள்ளது. இந்த இரண்டும்தான் தற்போது நிலவில் தரையிறங்கவில்லை. இதனுடன் இஸ்ரோவிற்கு உள்ள தொடர்புதான் துண்டிக்கப்பட்டு உள்ளது. நிலவிற்கு 2.1 கிமீ அருகில் சென்ற பின் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

    இயங்கும்

    இயங்கும்

    லேண்டருடன் தொடர்பை இழந்தாலும் ஆர்பிட்டர் இன்னமும் இஸ்ரோ உடன் தொடர்பில்தான் இருக்கிறது. இந்த ஆர்பிட்டர் தொடர்ந்து நிலவை ஆராயும். நிலவின் தென் துருவத்திற்கு மேலாக சுற்றி வந்து தொடர்ந்து ஆர்பிட்டர் நிலவை ஆராயும். இது இன்னும் ஒரு வருடத்திற்கு ஆராயும்.

    என்ன வெற்றி

    என்ன வெற்றி

    விக்ரம் லேண்டர் நிலவில் இறங்கி இருந்தாலும் கூட அது 14 நாட்கள் மட்டுமே ஆய்வு செய்யும். ஆகவே இந்த தகவல் துண்டிப்பை முழுதாக தோல்வி என்று கூற முடியாது. சந்திரயான் 2 கொண்டு சென்ற ஆர்பிட்டர் தொடர்ந்து தனது ஆய்வை தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.

    என்ன விளக்கம்

    என்ன விளக்கம்

    இந்த நிலையில் சந்திரயான் 2 குறித்து இஸ்ரோ இயக்குனர் சிவன் பேட்டி அளித்தார். அதில், சந்திரயான் 2ல் உள்ள விக்ரம் லேண்டர் 2.1 கிமீ வரை சரியாக இறங்கியது.அதன்பின் விக்ரம் லேண்டர் உடன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து ஆலோசனை நடந்து வருகிறது. டேட்டாக்களை சோதனை செய்து வருகிறோம், என்று குறிப்பிட்டார்.

    இஸ்ரோ என்ன

    இஸ்ரோ என்ன

    இது தொடர்பாக இஸ்ரோ கொடுத்துள்ள விளக்கத்தின்படி, சந்திரயான் 2 திட்டம் தோல்வி அல்ல. லேண்டர் உடன் மட்டுமே தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. சந்திரயான் 2 ஆர்பிட்டர் தொடர்ந்து நிலவை ஆய்வு செய்யும், என்று குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Chandrayaan 2: Vikram lander lost signal, But orbiter will work as usual for a year says ISRO.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X