For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கரம் கொடுத்த தெர்மல் இமேஜ்.. அசத்திய ஆர்பிட்டர்.. விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டது இப்படித்தான்!

சந்திரயான் 2ல் இருக்கும் விக்ரம் லேண்டர், தெர்மல் இமேஜிங் முறையை வைத்து கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    கரம் கொடுத்த தெர்மல் இமேஜ்... விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டது இப்படித்தான்!

    டெல்லி: சந்திரயான் 2ல் இருக்கும் விக்ரம் லேண்டர், தெர்மல் இமேஜிங் முறையை வைத்து ஆர்பிட்டர் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

    சந்திரயான் 2 நிலவில் தரையிறங்கி சாதனை படைக்கும் என்று நினைத்தவர்களுக்கு பெரிய ஏமாற்றம்தான் மிச்சமாகி உள்ளது. ஆம், சந்திராயன் 2ன் விக்ரம் லேண்டர் நிலவில் திட்டமிட்டபடி இறங்கவில்லை.

    மாறாக நிலவிற்கு மிக அருகில் 2.1 கிமீ தூரம் வரை விக்ரம் லேண்டர் சென்றது. அதன்பின் தொடர்பு துண்டிக்கப்பட்டதால், சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டர் எங்கே சென்றது என்று தெரியாமல் இஸ்ரோ குழம்பி வந்தது.

    நாட்டையே சோகத்தில் மூழ்கடித்த விக்ரம் லேண்டர் எங்கிருக்கிறது என கண்டுபிடிப்பு.. இஸ்ரோ தலைவர்நாட்டையே சோகத்தில் மூழ்கடித்த விக்ரம் லேண்டர் எங்கிருக்கிறது என கண்டுபிடிப்பு.. இஸ்ரோ தலைவர்

    என்ன செய்தார்கள்

    என்ன செய்தார்கள்

    அதே சமயம் லேண்டருடன் தொடர்பை இழந்தாலும் ஆர்பிட்டர் இன்னமும் இஸ்ரோ உடன் தொடர்பில்தான் இருக்கிறது. இந்த ஆர்பிட்டர் தொடர்ந்து நிலவை ஆராயும். இந்த ஆர்பிட்டர் மூலம் விக்ரம் உடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள இஸ்ரோ தீவிரமாக முயன்று வருகிறது. ஆர்பிட்டர் நிலவின் தென் பகுதியைத்தான் சுற்றி வருகிறது.

    திட்டம்

    திட்டம்

    இந்த ஆர்பிட்டரை வைத்து சந்திரயானை கண்டுபிடிக்க முடிவு செய்தனர். அதன்படியே இன்று காலை சந்திரயான் 2ல் இருக்கும் விக்ரம் லேண்டரை கண்டுபிடித்து இருக்கிறார்கள். ஆம் நிலவிற்கு மேல் சுற்றும் சந்திரயான் 2 ஆர்பிட்டர் இந்த விக்ரமை மேலே இருந்து படம் பிடித்து, கண்டுபிடித்துள்ளது.

    எப்படி நடந்தது

    எப்படி நடந்தது

    இதற்காக தெர்மல் இமேஜ் கேமராவை பயன்படுத்தி உள்ளனர். ஆர்பிட்டரில் தெர்மல் இமேஜிங் கேமராக்கள் இருக்கிறது. இது இருள், அதிக வெளிச்சம் என அனைத்து சூழ்நிலையிலும் படம் பிடிக்க கூடியவை. உலகில் இருக்கும் எல்லா பொருட்களும் குறிப்பிட்ட அளவு ஒளியை வெளியே விடும். அந்த ஒளியின் மூலம்தான் நாம் அதை பார்க்கக் முடிகிறது. இந்த தெர்மல் இமேஜிங் கேமராக்கள் அந்த ஒளியை படம் பிடிக்கும்.

    என்ன மாறுபாடு

    என்ன மாறுபாடு

    நிலவில் விக்ரம் லேண்டர் இருக்கும் பகுதியில் இருந்து வித்தியாசமான ஒளி வெளியே வரும். இந்த வித்தியாசமான ஒளிகளை மொத்தமாக சேர்த்து இணைத்து பின் ஒரு இமேஜ் உருவாக்கப்படும். அது உண்மையான பொருளின் வடிவத்தை 99% ஒட்டி இருக்கும். இந்த முறையை வைத்துதான் விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    என்ன உதாரணம்

    என்ன உதாரணம்

    உதாரணமாக தீவிரவாத அமைப்புகளை தாக்கும் முன் அந்த குறிப்பிட்ட இடத்தில் எத்தனை தீவிரவாதிகள் இருக்கிறார்கள் என்பதை ராணுவ வீரர்கள் தெர்மல் இமேஜிங் கேமராக்கள் மூலம் கண்டுபிடிப்பார்கள். சாட்டிலைட் அல்லது டிரோன் உதவியுடன் இது கண்டுபிடிக்கப்படும்.

    அதே முறை

    அதே முறை

    தற்போது அதே முறையை பயன்படுத்தி தெர்மல் இமேஜிங் கேமராக்களை வைத்து சந்திரயான் 2ன் ஆர்பிட்டர் மூலம் விக்ரம் லேண்டரை கண்டுபிடித்துள்ளனர். இந்த இமேஜ் விரைவில் வெளியிடப்படும். அதன்பின் விக்ரம் லேண்டரின் உண்மையான நிலை வெளியே தெரிய வரும்.

    English summary
    Chandrayaan 2: What is thermal imaging and How it helped in finding Vikram Lander?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X