For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சக்சஸ்.. புவி சுற்றுவட்டப் பாதையிலிருந்து பிரிந்து நிலவு சுற்றுவட்டப் பாதையை அடைந்தது சந்திரயான்-2

Google Oneindia Tamil News

Recommended Video

    Chandrayaan 2 | நிலவின் சுற்றுவட்டப் பாதையை அடைந்தது சந்திரயான்-2- வீடியோ

    சென்னை: புவி சுற்றுவட்டப்பாதையில் இருந்து விலகி, நிலவின் சுற்றுவட்டப் பாதையை வெற்றிகரமாக இன்று அடைந்தது சந்திரயான் 2.

    இஸ்ரோ சார்பில், ரூ.604 கோடியில் சந்திரயான் 2 விண்கலம் உருவாக்கப்பட்டு, ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள ஏவு தளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் விண்கலம் கடந்த ஜூலை 22ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது.

    Chandrayaan2 has been successfully placed in Moons orbit

    இந்த விண்கலத்துடன், ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் ஆகிய 3 கலன்களும் சேர்த்து பயணித்தன. இதுவரை இந்த விண்கலம் 5 மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளது.

    சந்திரயான் 2 நீள்வட்ட பாதையில் இருந்து சிறிது சிறிதாக நகர்ந்து சென்று ஆகஸ்ட் 14ம் நாள் நிலவை நோக்கிய பயணத்தை தொடங்கியது. இது 6வது முறையாக சுற்றுவட்டபாதை மாற்றப்பட்ட நிகழ்வாகும்.

    இதைத்தொடர்ந்து நிலவின் சுற்றுவட்டப் பாதையை சந்திரயான்-2 விண்கலம் இன்று சென்றடைந்துள்ளது.

    நிலவின் சுற்றுப் பாதையில் சந்திராயன்-2.. 30 நிமிடம் ரொம்ப டென்ஷனாகிவிட்டோம்.. இஸ்ரோ தலைவர் சிவன் நிலவின் சுற்றுப் பாதையில் சந்திராயன்-2.. 30 நிமிடம் ரொம்ப டென்ஷனாகிவிட்டோம்.. இஸ்ரோ தலைவர் சிவன்

    செப்டம்பர் 2ம் தேதி சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் தனியாக பிரிந்து நிலவை சுற்றி வரும். செப்டம்பர் 7ம் தேதி நிலவின் தென்துருவ பகுதியில் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    ISRO: Lunar Orbit Insertion of Chandrayaan2 maneuver was completed successfully today at 0902 hrs.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X