For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேரளா: செங்கண்ணுர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் மே 28ம் தேதி நடைபெறும்- தேர்தல் ஆணையம்

கேரளா மாநிலம் செங்கண்ணுர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் மே 28ம் தேதி நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

கொச்சி: கேரளா மாநிலம் செங்கண்ணுர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் மே 28ம் தேதி நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வரும் மே 28ம் தேதி இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள மொத்தம் 10 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. ஜெயில் தண்டனை காரணமாக கைதான எம்எல்ஏக்கள், தேர்தல் நடக்காத தொகுதிகள், எம்எல்ஏக்கள் மரணம் என பல்வேறு காரணங்களால் இந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. கேரளா, மஹாராஷ்டிரா, கர்நாடகா என பல மாநிலங்களில் இந்த தேர்தல் நடக்க உள்ளது.

Chengannur Assembly constituencies will be going for by-election by May 28

மே 28ம் தேதி நடக்கும் இந்த தேர்தலின் முடிவுகள் மே 31ம் தேதி அறிவிக்கப்படும். இந்த நிலையில் கேரளாவில் செங்கண்ணுர் தொகுதியிலும் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. முன்னாள் எம்எல்ஏ மரணம் அடைந்துவிட்டதால் அந்த தொகுதிக்கு தேர்தல் நடக்க உள்ளது.

அந்த தொகுதியின் எம்எல்ஏவான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கேகே ராமச்சந்திரன் ராயர் கடந்த ஜனவரி மாதம் மரணம் அடைந்தார். தற்போது அந்த தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பாக ஷாஜி செரியன், காங்கிரஸ் சார்பாக விஜயகுமார், பாஜக சார்பாக பிஎஸ் ஸ்ரீதரன் பிள்ளை ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இது இல்லாமல் மற்ற சிறிய கட்சிகளை சேர்ந்த இன்னும் 10 வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அடுத்த வருடம் நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில் இந்த தேர்தல் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

English summary
Chengannur Assembly constituencies will be going for by-election by May 28, This is a constituency town which is located in Alappuzha, a district of Kerala.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X