For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குறையும் வீராணம் ஏரி நீர்மட்டம்.. இன்னும் 20 நாட்களுக்கு மட்டுமே சென்னைக்கு குடிநீர்?

Google Oneindia Tamil News

Recommended Video

    TN WATER CRISIS | தாகத்தில் தவிக்கும் தமிழகம்.. தீர்வு என்ன ?-வீடியோ

    காட்டுமன்னார் கோவில்: வீராணம் ஏரியின் நீர்மட்டம் குறைந்து வருவதால் இன்னும் 20 நாட்களுக்கு மட்டுமே சென்னைக்கு குடிநீர் அனுப்ப முடியும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது சென்னைக்கு தினமும் 41 கனஅடி முதல் 96 கனஅடி வரை தினந்தோறும் அனுப்பப்படுகிறது. இதனால் ஏரியின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் இருப்பு என்பது சுத்தமாக இல்லை. குறிப்பாக செம்பரம்பாக்கம், புழல், சோழவரம் உள்ளிட்ட ஏரிகள் வறண்டுவிட்டன. இப்போது சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருக்கும் வீராணம் ஏரியின் நீர் மட்டம் 47.50 அடியில் இருந்து 42.98 அடியாக குறைந்துள்ளது.

    chennai get water next 20 days only over veeranam lake water level Decreases issue

    ஏரிகளுக்கு நீர் வரத்து இல்லாததால் தொடர்ந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவது குறைக்கப்படும். அடுத்த 20 நாட்களல் அதுவும் நிறுத்தப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறதது.

    5-வது சர்வதேச யோகா தினம்.. ராஞ்சியில் பிரதமர் மோடி பங்கேற்பு 5-வது சர்வதேச யோகா தினம்.. ராஞ்சியில் பிரதமர் மோடி பங்கேற்பு

    இதனிடையே சென்னையில் ஏற்கனவே குடிநீர் தட்டுப்பாடு தலைவிரத்தாடும் நிலையில் தற்போது காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    ஏரி முழுமையாக வற்றிவிட்டால் அந்த பகுதி மக்களும் பாதிக்கப்படுவார்கள் என்பதால் அப்பகுதி மக்களும் அதிர்ச்சியில் உள்ளார்கள். குடிநீரை தங்களுக்கு கூடுதலாக பகிர்ந்தளித்து தங்களது பஞ்சத்தையும் போக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    English summary
    already chennai faced water problem, but now faced big problem. chennai may get water next 20 days only over veeranam lake water level Decreases
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X