For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

யுனெஸ்கோ இசைநகரங்கள் பட்டியலில் சென்னை.. நாடாளுமன்ற உரையில் குடியரசு தலைவர் மகிழ்ச்சி

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    2018 பட்ஜெட் முக்கிய வரிகள் என்ன தெரியுமா ?

    டெல்லி: 2022ம் ஆண்டுக்குள் விவசாயிகள் வருமானம் 2 மடங்காக உயர்த்தப்படும் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது உரையில் தெரிவித்தார்.

    நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று துவங்கியது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.

    Chennai included in the list of Creative Cities by UNESCO: President Ram Nath Kovind

    அப்போது அவர் கூறுகையில், 2022ம் ஆண்டுக்குள் விவசாயிகள் வருமானம் 2 மடங்காக உயர்த்தப்படும் என்று தெரிவித்தார். யுனெஸ்கோவின் சிறந்த பண்பாட்டு நகரங்களின் பட்டியலில் அகமதாபாத், சென்னைக்கு இடம் கிடைத்துள்ளதற்கு பாராட்டு தெரிவித்தார்.

    யுனெஸ்கோவின் பாரம்பரிய இசை நகரங்களின் பட்டியலில் சென்னை இடம் பெற்றதில் மகிழ்ச்சியாக உள்ளதாக குடியரசு தலைவர் தெரிவித்தார். கும்பமேளா உற்சவத்திற்கு மனிதகுலத்தின் கலாசார பாரம்பரிய நிகழ்வு என்று ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பு அங்கீகரித்துள்ளது குறித்தும் பெருமை தெரிவித்தார் ஜனாதிபதி.

    2022ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர். காஷ்மீர் பயங்கரவாதிகள் வன்முறையை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும், சமூகத்தின் நலிந்த பிரிவினருக்காக அர்ப்பணிக்கப்பட்டது மத்திய அரசு என்றும் குடியரசு தலைவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

    English summary
    It's a matter of pride for us that UNESCO recognised Kumbh Mela as 'Intangible Cultural Heritage of Humanity'. UNESCO also designated Ahmedabad as 'Heritage City'. Chennai was included in the list of Creative Cities by UNESCO.” President Ram Nath Kovind said.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X