For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆந்திராவில் மூளை சாவடைந்த மாணவர் இதயம் சென்னை வந்தது.. தஞ்சை பெண்ணுக்கு வாழ்க்கை கிடைத்தது

Google Oneindia Tamil News

நெல்லூர்: ஆந்திராவில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த மருத்துவக் கல்லூரி மாணவனின் இதயம் சென்னை தனியார் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வந்த பெண்ணுக்கு பொருத்துவதற்காக சென்னை கொண்டு வரப்பட்டது.

ஆந்திர மாநிலம், நெல்லூரில் உள்ள நாராயணா மருத்துவக் கல்லூரியில் படித்து வந்தவர் விஜயகுமார். கடந்த சில தினங்களுக்கு முன்பு விபத்தில் படுகாயம் அடைந்த அவர், மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இதையடுத்து, அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன்வந்தனர்.

Chennai patient receives heart from brain-dead man in Andhra

இதனிடையே சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் தஞ்சையைச் சேர்ந்த ரேணுகா என்ற பெண்ணுக்கு இதயம் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதன் பின்னர், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நெல்லூரில் இருந்து சென்னைக்கு விஜயகுமாரின் இதயம் கொண்டுவரப்பட்டது. நள்ளிரவு 1.45 மணிக்கு கிளம்பிய வேன், அதிகாலை 4.15-க்கு சென்னைக்கு பத்திரமாக வந்தடைந்தது.

English summary
A medical college student who was studying in Narayana Medical College in Nellur, Andhra, who was declared brain dead after he had met with accident and his heart harvested and brought to Chennai for transplantation to another patient.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X