For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆம் பாலியல் ரீதியாக பேசியது உண்மைதான்.. மன்னித்துவிடுங்கள்.. சேட்டன் பகத் பரபரப்பு!

பிரபல எழுத்தாளர் சேட்டன் பகத், பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: பிரபல எழுத்தாளர் சேட்டன் பகத், பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லைகொடுத்ததை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டுள்ளார்.

கடந்த வருடம் முழுக்க ''மீடூ #MeToo'' என்ற ஹேஸ்டேக்கில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் குறித்து பேசப்பட்டது. உலகம் முழுக்க இந்த ஹேஷ்டேக் வைரலாக இருந்தது.

பெண்கள் பலர் தாங்கள் அனுபவித்த பாலியல் தொல்லை குறித்து இதில் எழுதினார்கள். முக்கியமாக பிரபலங்கள் பலர் தங்கள் அனுபவித்த பாலியல் தொல்லை குறித்து இதில் எழுதினார்கள்.

இந்தியாவில் வைரல்

இந்தியாவில் வைரல்

இந்த நிலையில் இந்தியாவிலும் பெண்கள் தைரியமாக தங்கள் அனுபவித்த தொல்லைகளை தற்போது எழுதி வருகிறார்கள். ஹிந்தி நடிகை தனுஷ்ஸ்ரீ தத்தா (தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்த நடிகை), இயக்குனர் நானா படேகர் (காலா பட வில்லன்) தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுதினார். இதையடுத்து தற்போது இணையம் முழுக்க பலர் தாங்கள் அனுபவித்த பாலியல் தொல்லைகள் குறித்து எழுதி வருகிறார்கள்.

சேட்டன் பகத் மீது குற்றச்சாட்டு

பிரபல இந்திய ஆங்கில எழுத்தாளர் சேட்டன் பகத் மீது பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு வைத்துள்ளார். சேட்டன் பகத் அவர் கல்யாணம் ஆன பின், தன்னிடம் தவறாக பேசினார். தன்னிடம் பாலியல் உறவு கொள்ள விரும்பினார் என்று கூறினார். அதற்கான ஸ்கிரீன் ஷாட்களை வெளியிட்டார் அந்த பெண்.

உண்மைதான்

இந்த நிலையில் இதுகுறித்து சேட்டன் பகத் விளக்கம் அளித்துள்ளார். அதில் அந்த மெசேஜ்கள் அனைத்தும் உண்மைதான் என்று கூறியுள்ளார். அதோடு இது பல காலத்திற்கு முன் நடந்தது என்றும் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து தன் மனைவியிடம் எல்லா உண்மைகளையும் சொல்லிவிட்டேன் என்றும் தெரிவித்து இருக்கிறார்.

மன்னிப்பு

மன்னிப்பு

மேலும் அப்போது அப்படி பேசியதற்கு மன்னித்துவிடுங்கள் என்றும் சேட்டன் பகத் தன்னுடைய முகநூல் போஸ்டில் தெரிவித்து இருக்கிறார். இப்படி செய்திருக்க கூடாது. அதனால் உங்களிடமும், என்னுடைய மனைவியிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் போஸ்ட் செய்துள்ளார். இது அவரது ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

English summary
Writer Chetan Bhagat accepted that he has harassed a girl in an FB post #MeeToo.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X