For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மிஸ்டர் நாயர்.. என்ஆர்சி வந்தா.. சட்டிஸ்கரில் பாதிப் பேர் அகதிகளாய்ருவாங்க போலயே!

Google Oneindia Tamil News

ராய்ப்பூர்: மிஸ்டர் நாயர்.. ஒரு ஊரே இங்கே மாயமாகியிருக்கு.. இது சிட்டிசன் படத்தில் நக்மா பேசும் வசனம்.. சட்டிஸ்கர் முதல்வர் சொல்லியுள்ள ஒரு தகவலைப் பார்த்தால் பாதி மாநிலமே அகதிகளாகும் அபாயம் இருக்கும் போல.

ஆம், தேசிய குடிமக்கள் பதிவேட்டை சட்டிஸ்கர் மாநிலத்தில் அமல்படுத்தினால், மாநிலத்தில் உள்ள பாதிப் பேரிடம் உரிய ஆவணங்கள் இருக்காது என்று சட்டிஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் அதிர வைத்துள்ளார்.

Chhattisgarh CM says half of the state population has no documents to prove their citizenship

காங்கிரஸ் ஆளும் மாநிலம் சட்டிஸ்கர். இங்கு முதல்வராக இருக்கும் பாகல், தேசிய குடிமக்கள் பதிவேடும், குடியுரிமைச் சட்டமும் தேவையில்லாத ஒன்று என்று விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியிலிருந்து...

சட்டிஸ்கர் மாநிலத்தில் 2.80 கோடி மக்கள் உள்ளனர். இவர்களில் கிட்டத்தட்ட பாதிப் பேரிடம் உரிய நில ஆவணங்கள் இருக்காது. ஏன் பலரிடம் நிலமே கூட இருக்காது.

வீர ஆஞ்சநேயர் தெரியும்.. அதென்ன விசா ஆஞ்சநேயர்.. திருமழிசை போய் பாருங்க.. டிச 23 முதல் லட்சார்ச்சனைவீர ஆஞ்சநேயர் தெரியும்.. அதென்ன விசா ஆஞ்சநேயர்.. திருமழிசை போய் பாருங்க.. டிச 23 முதல் லட்சார்ச்சனை

இவர்களின் பாட்டன், முப்பாட்டன் எல்லாம் படிப்பறிவில்லாதவர்கள். எந்தவிதமான ஆவணங்களும் இவர்களிடம் இருக்காது. தேசிய குடிமக்கள் பதிவேட்டுத் திட்டத்தை இங்கு அமல்படுத்தினால் பாதிப் பேர் அகதிகளாக வேண்டியதுதான்.

இந்த மக்களில் பலர் பல மாநிலங்களில் வசித்தவர்கள். 50, 100 வருடத்திற்கு முந்தைய ஆவணங்களைக் கேட்டால் எங்கு போய் அவர்கள் அதைப் பெற முடியும். எப்படிப் பெற முடியும்.

இந்தத் திட்டமும், சட்டமும் தேவையில்லாத ஒன்று, மக்கள் மீது ஏற்றப்பட்டுள்ள தேவையில்லாத சுமை. நாட்டின் குடிமக்களைக் கண்டறிய வேறு பல நல்ல வழிகள் உள்ளன. அதை சரிவர அமல்படுத்தினாலே போதும். ஆனால் அதை விட்டு விட்டு சாமானிய மக்களை தொந்தரவு செய்வது சரியான செயலன்று என்று கூறியுள்ளார் பாகல்.

English summary
Chhattisgarh CM Bhupesh Baghel has said that half of the state population has no documents to prove their citizenship.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X