For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சட்டிஸ்கரில் தேர்தல் நடக்கும் நேரத்தில் குண்டுவெடிப்பு.. நக்சல்கள் வெறிச்செயல்

சட்டிஸ்கரில் இன்று முதற்கட்ட சட்டமன்ற தேர்தல் நடந்து வரும் நிலையில் அங்கு தாண்டேவாடா பகுதியில் குண்டுவெடித்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    சட்டிஸ்கர்: இன்று முதற்கட்ட சட்டமன்ற தேர்தல்-வீடியோ

    ராய்பூர்: சட்டிஸ்கரில் இன்று முதற்கட்ட சட்டமன்ற தேர்தல் நடந்து வரும் நிலையில் அங்கு தாண்டேவாடா பகுதியில் குண்டுவெடித்துள்ளது.

    சட்டிஸ்கரில் இன்று முதற்கட்ட சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. சட்டிஸ்கரில் மொத்தம் 90 தொகுதிகள் உள்ளது. அதில் 18 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது.

    Chhattisgarh Election: Naxal blasted IED bomb near Dantewada to stop the election

    தேர்தல் காரணமாக அங்கு பாதுகாப்பு பணியில் 1 லட்சம் வீரர்கள் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள். அங்கு நக்சல் மக்களுக்கு பெரிய அளவில் எச்சரிக்கை விடுத்துள்ளது. தேர்தலை குலைக்க நக்சல் திட்டமிட்டுள்ளது.

    நேற்றே சட்டிஸ்கரில் ஆறு இடங்களில் குண்டு வெடித்தது குறிப்பிடத்தக்கது. இதில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் மோசமாக காயம் அடைந்தார்.

    இந்த நிலையில் இன்று அங்கு தேர்தல் நடக்கும் நிலையில் சட்டிஸ்கர் தாண்டேவாடா பகுதியில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. தேர்தலை நிறுத்தும் வகையில் நக்சல் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்.

    சட்டிஸ்கர் தேர்தல்.. மக்களை பயமுறுத்தும் நக்சல்.. பாதுகாப்பு பணியில் 1 லட்சம் வீரர்கள்! சட்டிஸ்கர் தேர்தல்.. மக்களை பயமுறுத்தும் நக்சல்.. பாதுகாப்பு பணியில் 1 லட்சம் வீரர்கள்!

    தேர்தல் அதிகாரிகளும் பாதுகாப்பு படையினரும் தேர்தலுக்கு தேவையான சாதனங்களை எடுத்து செல்லும் வழியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் பாதுகாப்பு படையினர் திரும்பி தாக்கும் முன் நக்சல்கள் தப்பிஓடிவிட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் எந்த விதமான உயிர் சேதமும் ஏற்படவில்லை. இதனால் அங்கு தேர்தல் 30 நிமிடம் தாமதமாக தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Dantewada: 1-2 kilograms of Improvised Explosive Device (IED) blasted by naxals near Tumakpal camp in Katekalyan block. Voting is underway for 10 out of 18 seats in the first phase of
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X